• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • திருப்பதி பக்தர்களிடம் ரூ. 8.73 லட்சம் மதிப்பு நகைகளை திருடிய 2 பெண்கள் கைது

திருப்பதி பக்தர்களிடம் ரூ. 8.73 லட்சம் மதிப்பு நகைகளை திருடிய 2 பெண்கள் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இவர்கள் இருவரும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் கைப்பைகளை பிளேடால் அறுத்து திருடியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    திருப்பதியில் பக்தர்களிடம் திருடிய 2 பெண்களை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஆத்மகூரை சேர்ந்த ரமணம்மா, அனிதா ஆகியோரை திருப்பதி குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.

    இதுகுறித்து குற்றப்பிரிவு டிஎஸ்பி ரவிசங்கர் கூறியதாவது: திருப்பதியில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம், திருமலையில் பக்தர்கள் கூடும் முக்கிய இடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் நகை, பணம் உள்ளிட்ட உடமைகள் திருடுபோகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    இதுதொடர்பாக, போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நகை திருட்டில் ஈடுபட்ட ரமணம்மா, அனிதா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.8.73 லட்சம் மதிப்புடைய 280 கிராம் தங்க நகைகள் மற்றும் மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இவர்கள் இருவரும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் கைப்பைகளை பிளேடால் அறுத்து திருடியுள்ளனர். இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. பல நாட்களாக தேடப்பட்டு வந்த  இவர்கள் 2 பேரும் திருப்பதி பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் ரவிசங்கர்.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: