ஹோம் /நியூஸ் /இந்தியா /

பெண் கொடுக்காததால் ஆத்திரம்... அத்தையின் குடும்பத்தை வீட்டோடு தீ வைத்து கொளுத்திய இளைஞர்

பெண் கொடுக்காததால் ஆத்திரம்... அத்தையின் குடும்பத்தை வீட்டோடு தீ வைத்து கொளுத்திய இளைஞர்

பெண் கொடுக்காததால் ஆத்திரம்... அத்தையின் குடும்பத்தை வீட்டோடு தீ வைத்து கொளுத்திய இளைஞர்

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  ஒரு தலையாக காதலித்த அத்தை மகளை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் வீட்டோடு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கடியம் மண்டலம், துல்லா கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாஸ். அதே பகுதியில் உள்ள தனது அத்தை சத்தியவதி என்பவரின் மகளை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

  கடந்த 6 மாதமாக மகளை திருமணம் செய்து வைக்குமாறு அத்தை சத்யவதியுடன், ஸ்ரீனிவாஸ் தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் ஸ்ரீனிவாஸ் நடவடிக்கை பிடிக்காத சத்தியவதி தனது மகளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தார்.

  இதனால் தனது அத்தை குடும்பம் மீது கோபம் கொண்ட ஸ்ரீனிவாஸ் அவர்களை பழித்தீர்க்க நினைத்துள்ளார்.  இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சத்தியவதி வீட்டிற்கு சென்ற ஸ்ரீனிவாஸ் பெண் தராதது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

  அந்த தகராறில் காயமடைந்த சத்தியவதி, ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர் தொந்தரவு தாங்க முடியாமல் ஸ்ரீனிவாஸ் மீது போலீசில் புகார் அளித்தார்.

  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த ஸ்ரீனிவாஸ், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒன்றரை மணி அளவில் துல்லா கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி உள்ளனர். பின்னர் சத்யவதி வீட்டிற்கு சென்றுள்ளார்.

  அங்கு அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது வீட்டின் வெளியே தாழ்ப்பாழ் போட்டுவிட்டு, வீடு மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளார்.

  ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் சூடு தாங்க முடியாமல் வெளியே வர முயன்றுள்ளனர். ஆனால் வீடு வெளியில் தாழிடப்பட்டிருந்ததால் வெளியே வர முடியாமல் அலறி உள்ளனர்.

  அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைப்பதற்குள் சத்தியவதியின் 18 வயதான மகன் ராமு, 5 வயது சிறுமி ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர்.

  மேலும் சத்தியவதி அவரது அக்காள் துர்கா பவானி, அக்காள் மகள்கள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை ராஜமகேந்திரவரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இதில் சத்தியவதி, துர்கா பவானி ஆகியோர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  பெண் கொடுக்காத அத்தை குடும்பதையே கொளுத்திய சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஸ்ரீநிவாசை கைது செய்துள்ளனர்.

  Published by:Sankar
  First published:

  Tags: Andhra Pradesh