ஹோம் /நியூஸ் /இந்தியா /

மனைவி போட்ட டீயை குடித்து கணவர், 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு - உத்தரப்பிரதேசத்தில் சோகம்!

மனைவி போட்ட டீயை குடித்து கணவர், 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு - உத்தரப்பிரதேசத்தில் சோகம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உத்திர பிரதேசத்தில் காலையில் மனைவி போட்ட டீயை குடித்த மொத்த குடும்பமே இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  உத்திர பிரதேசத்தில் மெயின்புரி மாவட்டத்தில் நாக்லா கன்ஹாய் கிராமத்தில் காலையில் மனைவி போட்ட டீயை குடித்து கணவர், மாமனார் மற்றும் 2 குழந்தைகள் இறந்துள்ளனர். மேலும் அதே டீயை குடித்த பக்கத்து வீட்டுக்காரர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  நாக்லா கன்ஹாய் கிராமத்தில் கணவர் சிவனாந்தன் (35) அவரின் மனைவி ரமாமூர்த்தி மற்றும் இவர்களில் 6 வயது மகன் ஷிவாங் குமார், 5 வயது மகன் திவ்யான்ஷ் ஆகியோர் வசித்து வருகின்றனர். பண்டிகை காலத்தையொட்டி அவரின் சிவனாந்தனின் தந்தை ரவீந்திரன் (55) இவர்களைக் பார்க்க வந்துள்ளார்.

  இதையடுத்து ரமாமூர்த்தி அனைவருக்கும்  குடிக்க  டீ தாயார் செய்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் சோப்ரன் சிங் என்பவரும் அங்கு வரவே அவருக்கும் டீ கொடுத்துள்ளார்.

  ரமாமூர்த்தி  தயார் செய்த டீயை அருந்திய சில மணி நேரத்திலேயே ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து அனைவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்ததில் மாமனார் ரவீந்திரன், 2 குழந்தைகள் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

  தொடர்ந்து தீவிர சிகிச்சையிலிருந்த கணவர் சிவனாந்தனும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.மேலும் பக்கத்து வீட்டுக்காரர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

  Also Read : 'வந்தே பாரத்... தொடரும் விபத்து’ : 3வது முறையாக மாடு மோதி விபத்துகுள்ளான ரயில்!

  முதல் கட்ட விசாரணையில் ரமா மூர்த்தி டீயை தயார் செய்யும் போது தவறுதலாகப் பூச்சி மருந்தை டீயில் கலந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த சம்பவம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்திக்கொண்டு வருகிறது. டீ போடப் பயன்படுத்திய பொருட்களைக் கையகப்படுத்தியுள்ளனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: Tea, Uttar pradesh