முகப்பு /செய்தி /இந்தியா / இண்டிகோ விமானங்கள் நடுவானில் மோத இருந்த விபரீதம்

இண்டிகோ விமானங்கள் நடுவானில் மோத இருந்த விபரீதம்

Indigo

Indigo

இரண்டு விமானங்களும் 'breach of separation' என்ற தொழில்நுட்ப தவறை இழைத்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக தரப்பில் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பெங்களூரு விமான நிலையத்திலிருந்து டேக் ஆஃப் ஆன இரண்டு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோத இருந்த நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட விவகாரம் தற்போது தெரியவந்துள்ளது.

பெங்களூரு விமான நிலையத்திலிருந்து கடந்த ஜனவரி 9ம் தேதியன்று காலை 5 நிமிட இடைவெளியில், இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் டேக் ஆஃப் ஆகின. பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்ட 6E455 என்ற விமானமும், பெங்களூருவில் இருந்து புவனேஸ்வருக்கு புறப்பட்ட 6E246 என்ற அந்த இரு விமானங்களும் டேக் ஆஃப் ஆன நிலையில் வானில் ஒன்றோடு ஒன்று மோத இருந்தன. ஆனால் இந்த மோதல் சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு விமான நிலையத்தின் வான் பரப்பில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து எந்த லாக் புத்தகத்திலும் பதிவு செய்யப்படவில்லை,. இது குறித்து விமான நிலைய ஆணையமும் தகவல் வெளியிடவில்லை. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைவர் அருண் குமார் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இச்சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும், தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Also read:  தந்தையின் வக்கிரம்.. மகனுடன் சேர்ந்து மகளை பலாத்காரம் செய்த கொடூரம்..

சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு விமானங்களும் 'breach of separation' என்ற தொழில்நுட்ப தவறை இழைத்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக தரப்பில் தெரிவித்தனர். இரண்டு விமானங்கள் ஒரு வான்வெளியில் குறைந்தபட்ச கட்டாய செங்குத்து அல்லது கிடைமட்ட தூரத்தை கடக்கும்போது 'breach of separation' ஏற்படுகிறது. புறப்பட்ட பிறகு இரண்டு விமானங்களும் ஒருவரையொருவர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தன.

Also read: 3 லட்சம் மரணங்களுக்கு வாய்ப்பு.. 2,000 எலிகளை கொல்ல உத்தரவு - உலக நாடுகளில் கொரோனா சூழல் இதுதான்!

அப்ரோச் ரேடார் கன்ட்ரோலர் திசைதிருப்பலைக் கொடுத்தது மற்றும் நடுவானில் மோதுவதைத் தவிர்த்தது" என்று அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். சமீபத்தில் துபாய் விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோத இருந்த சம்பவம் வெளியான நிலையில் தற்போது மேலும் அதே போன்றதொரு சம்பவம் இந்தியாவில் நடைபெற்றிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

First published:

Tags: Bengaluru, Indigo, Indigo Air Service