முகப்பு /செய்தி /இந்தியா / இந்தி பாடல்களை மட்டும் பாடியதால் பிரபல பாடகர் மீது பாட்டில் வீச்சு- கர்நாடகாவில் இருவர் கைது

இந்தி பாடல்களை மட்டும் பாடியதால் பிரபல பாடகர் மீது பாட்டில் வீச்சு- கர்நாடகாவில் இருவர் கைது

கைலாஷ் கெர்

கைலாஷ் கெர்

கர்நாடகாவில் உள்ள ஹம்பியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் இந்தி பாடல்களை பாடிய‌ பிரபல பாடகர் கைலாஷ் கெர் மீது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

  • News18 India
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka |

2023 ஜனவரி 27 முதல் 29 வரை கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹம்பியில் விஜயநகரப் பேரரசின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் கர்நாடக அரசின் சார்பில் 3 நாட்கள் 'ஹம்பி உத்சவம்' நிகழ்ச்சி   நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை இரவு பிரபல பாடகர் கைலாஷ் கெர் பங்கேற்று பாடல்களை பாடினார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாடகர் கைலாஷ் கெர் ஹம்பி  நிகழ்ச்சியில்  பாடும் போது இந்திப் பாடல்களை மட்டுமே பாடினார். அதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் கன்னட பாடல்களை பாடுமாறு கூச்சல் போட்டனர். இதனை பொருட்படுத்தாமல் கைலாஷ் கெர் இந்தி பாடல்களையே தொடர்ந்து பாடினார்.

இதனை அடுத்து மேலும் கோபம் அடைந்த ஒருவர் கூட்டத்தில் இருந்து தண்ணீர் பாட்டிலை அவர் மீது வீசினார். ஆனால் அந்த பாட்டில் பாடகர் மீது படாமல் அவரை தாண்டி மேடையில் விழுந்தது. இதை கைலாஷ் கெர் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஹிந்தி பாடலை நிறுத்தாமல்  பாடினார். சிறிது நேரத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் வந்து அந்த பாட்டிலை எடுத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.

இதையடுத்து மேடைக்கு வந்த ஹம்பி போலீஸார் தண்ணீர் பாட்டிலை வீசி நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

அப்போது கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பை சேர்ந்த பிரதீப் (22), சுரேந்தர் (21) ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையின்போது, கன்னட பாடல் பாடாததால் பாட்டில் வீசியதாக இருவரும் வாக்குமூலம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Karnataka, Singer