ஹோம் /நியூஸ் /இந்தியா /

கண்டேன் காதலை! திருமண குஷியில் 2.3 அடி உயர மனிதர்.. பிரதமர் மோடி, முதல்வர் யோகிக்கு அழைப்பு

கண்டேன் காதலை! திருமண குஷியில் 2.3 அடி உயர மனிதர்.. பிரதமர் மோடி, முதல்வர் யோகிக்கு அழைப்பு

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

நீண்ட தேடலுக்குப் பின் வரண் கிடைத்த அசீம் மன்சூரிக்கு வரும் நவம்பர் 7ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் வசிக்கும் 2.3 அடி உயரம் கொண்ட மனிதர் தனது திருமணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அழைக்கப் போவதாக கூறியுள்ளார்.

  உத்தரப்பிரதேச ஷாமிளி மாவட்டத்தில் உள்ள கைரான பகுதியில் வசித்து வருபவர் 27 வயது நபர் அசீம் மன்சூரி. பெற்றோருக்கு ஆறாவது குழந்தையாக பிறந்த மன்சூரியின் உயரம் 2.3 அடி ஆகும். உயரம் குறைவாக இருப்பதால் இளம் வயதில் இருந்தே கேலி கிண்டலுக்கு ஆளாகியவர் அசீம். பள்ளி பருவத்தில் தனக்கு நேர்ந்த கேலி அவமானத்தை தாங்க முடியாமல் 5ஆம் வகுப்புடன் இவர் படிப்பை நிறுத்திக் கொண்டார். பின்னர் இவர் சகோதரர்கள் நடத்திய அழகு நிறுவன கடையில் பணிபுரிந்த இவர், பின்னர் அவரே தனியாக கடை நடத்தி தொழில் செய்து வருகிறார்.

  தான் நன்கு சம்பாதித்தாலும் திருமணம் செய்துகொள்ள பெண் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வந்துள்ளது.தனக்கு பெண் கிடைக்கவில்லை, எனவே பெண் பார்த்து தாருங்கள் என்ற கோரிக்கையுடன் உள்ளூர் காவல் நிலையம் தொடங்கி, உபி முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என பலவருக்கும் கடிதம் மூலம் கோரிக்கை வைத்து வந்தார் மன்சூரி.

  இந்நிலையில், மன்சூரியின் நீண்ட கால தேடலுக்கு தற்போது விடிவுகாலம் பிறந்துள்ளது. அவர் தனது வாழ்க்கை துணையை கண்டடைந்த நிலையில், வரும் நவம்பர் 7ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இவரது ஊருக்கு அருகே உள்ள ஹபூர் என்ற பகுதியைச் சேர்ந்த புஷாரா என்ற பெண்ணுடன் மன்சூரிக்கு கடந்த ஆண்டு அறிமுகம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். புஷாரா பட்டப்படிப்பு படித்து வந்ததால் ஓராண்டு கழித்து திருமணத்தை வைத்துக்கொள்ள முடிவெடுத்தனர்.

  இதையும் படிங்க: 369 அடியில் உலகின் மிக உயரமான சிவன் சிலை..! - ராஜஸ்தானில் திறப்பு

  அதன்படி, அடுத்த மாதம் தனது திருமணத்திற்கு குஷியாக தயாராகிவருகிறார் மன்சூரி. தனது நீண்ட நாள் கனவு நனவானதை அடுத்து தனது திருமணத்திற்கு உற்றார் உறவினர் மட்டுமல்லாது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கவுள்ளேன் என மன்சூரி தெரிவிக்கிறார். தனது திருமண அழைப்பிதழை பிரதமருக்கும் முதல்வருக்கும் வழங்கவுள்ளதாக கூறிய மன்சூரி, இதற்காக டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Marriage, PM Modi, Uttar pradesh, Wedding plans, Yogi adityanath