மும்பையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி அளிப்படுவ்தாக மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
கொரோனா 2ஆவது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் மின்சார ரயில்களில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. அத்தியாவசிய, சுகாதார மற்றும் அரசு ஊழியர்கள் மட்டுமே மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக பொதுமக்கள் அலுவலகம், வேலைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களை மின்சார ரயில்களில் அனுமதிக்க வேண்டும் என கடந்த மாதம் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மிலிந்த் தியோரா மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதேபோல, பல்வேறு தரப்பினரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன் மின்சார ரயில்களில் பொதுமக்களை பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பாஜக மும்பை மற்றும் தானேவில் போராட்டம் நடத்தியது.
இந்நிலையில், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சமூகவலைதளம் மூலமாக பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், மும்பையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதுவரை மும்பையில் 19 லட்சம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். எனவே, முதல் கட்டமாக மின்சார ரயில்களில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 2ஆவது டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்கள் முடிந்தவர்கள் வருகிற 15ஆம் தேதி முதல் மின்சார ரயில்களில் பயணம் செய்யலாம்.
தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் பெற செல்போன் செயலி உள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்ட விவரங்களை கொடுத்து அதில் டிக்கெட், மாத சீசன் பாஸ் பெறலாம். ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் நேரடியாகவும் டிக்கெட், மற்றும் பாஸ் பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் வார்டு ஆபிஸ், புறநகர் ரயில்நிலையங்களிலும் டிக்கெட் பெறலாம். இந்த சீசன் பாஸ்களின் உண்மை தன்மையை கண்டறிய க்யுஆர் கோடு வழங்கப்படும்.
Must Read : சென்னையில் 9 இடங்களில் இன்று முதல் கடைகளை திறக்க அனுமதி
மும்பையில், இதேபோல வணிக வளாகங்கள், கடைகள், ஹோட்டல், உணவகங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது மற்றும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பான முடிவு கொரோனா பணிக்குழுவுடன் நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடந்த ஜூலை மாதம் மும்பையில் விக்ரோலி, செம்பூர் பகுதிகள் நிலச்சரிவாலும் ராய்காட், ரத்னகிரி, சாங்கிலி, கோலாப்பூர் ஆகிய பகுதிகள் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய 4 லட்சத்து 37 ஆயிரத்து 731 பேர் மீட்கப்பட்டனர். 47 ஆயிரத்து 214 பேர் 349 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். வெள்ள சேதத்தை ஆய்வு செய்தபிறகு, உடனடி மற்றும் நீண்டகால மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக 11 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric Train, Maharashtra, Mumbai