முகப்பு /செய்தி /இந்தியா / இன்ஃபுளூயன்சா காய்ச்சல் பாதிப்பு.. இருவர் உயிரிழப்பு... 90 பேருக்கு பாதிப்பு - மத்திய அரசு தகவல்

இன்ஃபுளூயன்சா காய்ச்சல் பாதிப்பு.. இருவர் உயிரிழப்பு... 90 பேருக்கு பாதிப்பு - மத்திய அரசு தகவல்

மாதிரி படம்

மாதிரி படம்

சளி போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

நாடு முழுவதும் இன்ஃபுளூயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பலர் H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதுவரை நாடு முழுவதும் 90 பேர் H3N2 வைரஸாலும் , 8 பேர் H1N1 வைரஸாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா மற்றும் ஹரியானா மாநிலங்களில் தலா ஒருவர் இன்ப்ளூயன்சாவால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

H1N1, H3N2 என இரண்டு வகை இன்ப்ளூயன்சா வைரஸ் பரவி வரும் நிலையில் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா போன்ற அறிகுறிகளே இருப்பதால் மக்களிடையே மேலும் அச்சம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அடிக்கடி கைகளை கழுவவும், மாஸ்க் அணியவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தாங்களாக மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

First published:

Tags: Avian influenza