• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அசாம் : ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் போது வன்முறை... 9 போலீசார் காயம், இருவர் சுட்டுக்கொலை

அசாம் : ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் போது வன்முறை... 9 போலீசார் காயம், இருவர் சுட்டுக்கொலை

அசாம் வன்முறை

அசாம் வன்முறை

கடந்த திங்கட்கிழமை ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி தொடங்கியது. அப்போது, 800 குடும்பங்களின் ஆக்கிரமிப்பில் இருந்த ஆயிரத்து 487 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டன.

  • Share this:
    அசாம் மாநிலம் தரங் மாவட்டத்தில் வங்கதேசத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்களை மீட்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தரங் மாவட்டம் தால்பூர் பகுதியில் வங்கதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள், சுமார் 2 ஆயிரத்து 800 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்புகள் அமைத்திருந்தனர். அந்த நிலங்களை மீட்டு வேளாண் திட்டங்களுக்கு பயன்படுத்த அசாம் மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது.

    அதன்படி, கடந்த திங்கட்கிழமை ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி தொடங்கியது. அப்போது, 800 குடும்பங்களின் ஆக்கிரமிப்பில் இருந்த ஆயிரத்து 487 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மீதமுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக நூற்றுக்கணக்கான போலீசார் வியாழக்கிழமை சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதனால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். அப்போது, போலீசாரை நோக்கி கட்டையை தூக்கிக் கொண்டு வந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டதுடன், லத்தியால் கடுமையாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த தாக்குதலில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்தனர். காவலர்கள் தரப்பில் 9 பேர் படுகாயமடைந்தனர். அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி தொடரும் என்று முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தால்பூர் சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மாநில அரசே வன்முறையை தூண்டிவிட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும் அசாம் மாநில சகோதர, சகோதரிகளுக்கு உறுதுணையாக இருப்பேன் எந்த ஒரு குழந்தைக்கும் இதுபோன்ற சூழல் ஏற்படக் கூடாது என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: