உ.பி. உன்னாவ்வில் மீண்டும் பயங்கரம்: 2 தலித் சிறுமிகள் வாயில் நுரைதள்ளி இறப்பு- இன்னொரு சிறுமி உயிருக்குப் போராட்டம்

உ.பி. உன்னாவ்வில் மீண்டும் பயங்கரம்: 2 தலித் சிறுமிகள் வாயில் நுரைதள்ளி இறப்பு- இன்னொரு சிறுமி உயிருக்குப் போராட்டம்

தலித் சிறுமிகள் இறந்து கிடந்த இடத்தில் போலீஸார்.

முதற்கட்ட தகவல்களின் படி உடலில் காயங்கள் எதுவும் இல்லை.  பலியான சிறுமிகளில் ஒருவரின் தாய், சிறுமியின் வாயிலிருந்து நுரைதள்ளியிருப்பதாகவும், துணி சரியாக இருந்ததாகவும் ஆனால் கழுத்தில் கர்சீப் இறுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  பாலியல் பலாத்காரத்துக்கும் வன்முறைக்கும் பெயர்பெற்ற உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் கால்நடைத் தீவனம் சேகரிக்கச் என்ற 2 தலித் சிறுமிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

  இன்னொரு சிறுமி உயிருக்குப் போராடி வருகிறார். 3 சிறுமிகளுக்கும் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

  மர்மமான முறையில்  மயங்கிக் கிடந்த சிறுமிகள் இருவரும் மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தனர். 3வது சிறுமி விஷத்திற்கு எதிராக போராடி வருகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் இவரது பெற்றோர் யாரோ விஷம் வைத்து விட்டார்கள் என்று கதறி அழுது வருகின்றனர்.

  உன்னாவ் போலீஸ் எஸ்.பி ஆனந்த் குல்கர்னி இது தொடர்பாகக் கூறும்போது, “இரண்டு சிறுமிகள் மருத்துவமனையில் உயிரிழந்தனர், இன்னொரு சிறுமி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  முதல்கட்ட தகவல்களின் படி புல் வெட்ட 3 சிறுமிகளும் சென்றதாகவும், மருத்துவர்கள் விஷம் குடித்ததான அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். விசாரணை நடைபெற்று வருகிறது.
  இதற்கான புலன் விசாரணைக்காக 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் விஷம் குடித்ததற்கான அறிகுறிகள் அதிகமுள்ளன, அந்த இடமே நுரைதள்ளி இறந்ததற்கான அடையாளங்கள் இருந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

  முதற்கட்ட தகவல்களின் படி உடலில் காயங்கள் எதுவும் இல்லை.  பலியான சிறுமிகளில் ஒருவரின் தாய், சிறுமியின் வாயிலிருந்து நுரைதள்ளியிருப்பதாகவும், துணி சரியாக இருந்ததாகவும் ஆனால் கழுத்தில் கர்சீப் இறுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் கை, கால்கள் கட்டப்படவில்லைல் என்கிறார் அந்த கதறிய தாயார்.

  இதற்கிடையே உயிருக்குப் போராடி வரும் 3வது சிறுமியை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தலித் குழுக்கள், பீம் ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆஸாத் கோரிக்கை வைத்துள்ளார்.. ”இந்தியாவில் தலித்துக்கள் மீதான வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றனர், இந்த அராஜகங்களை பத்தோடு பதினொன்றாக இயல்பாக்கம் செய்வதை ஏற்க முடியாது” என்றார்

  ஆனால் உயிருக்குப் போராடும் சிறுமியை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றும் திட்டம் இல்லை என்று அரசு தரப்புகள் கூறிவருகின்றன.

  மருத்துவமனையில் இறந்த சிறுமிகளின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வெளியானவுடன் உண்மை நிலவரம் தெரியலாம் என்று தெரிகிறது.
  உ.பி.யில் கடந்த செப்.20ம் தேதி ஹதரஸில் தலித் பெண் ஒருவர் 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இதனை உயர் சாதியான தாக்கூர் சாதியைச் சேர்ந்தவர்கள் தான் செய்திருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில் நம்மை உறைய வைத்த விவகாரம் என்னவெனில் ஆதாரங்களை அழிக்கும் நோக்குடன் தலித் பெண்ணின் முதுகெலும்பு உடைக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்டிருந்ததே.
  2020-ம் ஆண்டு தகவலின் அடிப்படையிலேயே 45,935 வழக்குகள் தலித்துகளுக்கு எதிரான வன்முறை வழக்குகளாகும். 2018-ம் ஆண்டை விட 7.6% அதிகரித்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: