ஹோம் /நியூஸ் /இந்தியா /

புத்த கயா கோயிலில் இரண்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது

புத்த கயா கோயிலில் இரண்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  கடந்த வெள்ளிக்கிழமை அங்கு நாட்டு வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன.

  கோயிலின் 4வது வாசலில் தலா 10 கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகள் இருப்பதை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் கண்டு பிடித்தனர். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு அப்புறப்படுத்தப்பட்டது.

  பல மணிநேர முயற்சிக்கு பின் அந்த வெடிகுண்டு செயலிழக்கப்பட்டது. உரிய நேரத்தில் கண்டெடுக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனை நடைபெற்றது.

  பிஹார் மாநிலத்தில் உள்ள புத்த கயா, புத்த மதத்தின் புகழ்பெற்ற பனித தலமாகும். இங்குள்ள மகாபோதி ஆலயத்திற்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் ஆண்டு முழுவதும் வருகை தருகின்றனர்..

  வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், கோயிலுக்கு, திபெத்திய மதத் தலைவர் தலாய் லமா வந்திருந்தார். அதுபோலவே, பிஹார் ஆளுநர் சத்யபால் மாலிக்கும் நேற்று புத்த கயாவிற்கு வந்திருந்தார்.

  வழிபாடு முடித்து விட்டு அவர் ஓய்வு எடுக்க சென்ற நேரத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

  இதையடுத்து பிஹார் டிஜிபி பி கே தாகுர் சந்தேகத்திற்குள்ளானவர்களாஈ சிசிடிவி ஆதாரங்கள் மூலமாக கண்டறிதுள்ளதாகவும் தீவிரவிசாரணையில் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

  இதனைத் தொடர்ந்து பாதுகாப்புகாக அங்கு 3000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  First published: