ஹோம் /நியூஸ் /இந்தியா /

புதையல் எடுப்பதாகக் கூறி எலுமிச்சை பழத்தை பறக்கவிட்ட மந்திரவாதிகள் கைது!

புதையல் எடுப்பதாகக் கூறி எலுமிச்சை பழத்தை பறக்கவிட்ட மந்திரவாதிகள் கைது!

எலுமிச்சை பழத்தை பறக்க விட்டு வேடிக்கை காட்டும் போது

எலுமிச்சை பழத்தை பறக்க விட்டு வேடிக்கை காட்டும் போது

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  திருப்பதி அருகே மந்திர சக்தியால் எலுமிச்சை பழத்தை பறக்கவிட்டு பழமையான பெருமாள் கோயில் புதையலை எடுக்க முயன்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

  ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடபுரம் கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் புதையல் இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், 4 பேர் கொண்ட கும்பல் அப்பகுதியில் முகாமிட்டு பூஜைகள் செய்துள்ளனர். அப்பகுதிக்கு வந்த கிராமத்தினர் மந்திரவாதிகள் நான்கு பேரையும் பிடிக்க முயற்சித்ததில் இருவர் மட்டுமே சிக்கியுள்ளனர்.

  அவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய இருவரை ஏர்ரவாரிப்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் திருப்பதியை சேர்ந்த பட்டாபிராம் ரெட்டி, ஒம் பிரகாஷ் ராஜ் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் போலீசார் முன்னிலையில் எலுமிச்சை பழத்தை பறக்கவிட்டு வேடிக்கை காட்டினர்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Andhra Pradesh, Temple treasure