மேற்குவங்க மாநிலத்தில் வாக்குப்பதிவின்போது 4 பேர் மீது துப்பாக்கிச் சூடு!

4 பேர் மீது துப்பாக்கிச் சூடு

மேற்குவங்க மாநிலத்தில் 4ம் கட்ட வாகுப்திவின் போது 4 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • Share this:
தமிழகம், அசாம், கேரளா மற்றும் புதுவையில் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று அங்கு 4வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கூச் பெகர், பிலிபுர்துவர், சவுத் 24 பர்கனாஸ், ஹவுரா மற்றும் ஹூக்ளி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 44 தொகுதிகளில் வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தேர்தல் ஆணைய தகவலின்படி காலை 11:05 மணி நிலவரப்படி 16.65% வாக்குகள் பதிவாகி உள்ளன.

கடந்த கட்ட தேர்தல்களில் மேற்கு வங்கம் பல வன்முறை சம்பவங்களை கண்டது. அது இன்றும் தொடர்ந்து வருகிறது. மாநிலத்தில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் இன்று காலை கூச் பெகர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில், சுமார் 8 மணி அளவில் அங்குள்ள சித்தால்குச்சி பகுதியில் உள்ள 85ம் எண் வாக்குச்சாவடியில் மத்திய பாதுகாப்புப் படையினர் மீது கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மத்திய பாதுகாப்புப் படையினர் துப்பாச்சூடு நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர், இதில் 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். அவருடைய பெயர் ஆனந்தா பர்மர் என தெரியவந்துள்ளது. துப்பாக்கி குண்டு பட்டதில் 3 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

52 வழக்குகளில் தொடர்புடைய கேங்க்ஸ்டர் எம்.எல்.ஏ.. 150 காவலர்கள் புடைசூழ பஞ்சாபிலிருந்து உ.பி சிறைக்கு மாற்றம்!

 

இச்சம்பவம் தொடர்பாக பாஜகவினருக்கும், திரிணாமுல் காங்கிரஸாருகும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக தேர்தல் நுண் பார்வையாளிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. இதே போல கூச் பெகரில் மேலும் ஒரு பூத்தில் பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல் நடைபெற்றதாகவும், அங்கும் சுய பாதுகாப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் மூவர்பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செயப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக கூச் பெகரில் பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் பயணம் செய்த கார் மீது சில தினங்களுக்கு முன் சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

மேற்குவங்கத்தில் அடுத்ததாக 5ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 17ம் தேதி நடைபெற உள்ளது.
Published by:Arun
First published: