ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆன்லைனில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட 19 வயது இளம்பெண் மரணம்... கேரளாவில் தொடரும் அதிர்ச்சி

ஆன்லைனில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட 19 வயது இளம்பெண் மரணம்... கேரளாவில் தொடரும் அதிர்ச்சி

உயிரிழந்த இளம்பெண் அஞ்சுஸ்ரீ

உயிரிழந்த இளம்பெண் அஞ்சுஸ்ரீ

ஆன்லைனில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட இளம் பெண் உடல் நலக்குறைவால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண் அஞ்சுஸ்ரீ பார்வதி. இவரின் குடும்பத்தினர் புத்தாண்டு இரவில் ஆன்லைனில் பிரியாணி ஆடர் செய்து சாப்பிட்டுள்ளனர். சாப்பாடு, குழிமந்தி (Kuzhimanthi) என்ற கேரளா வகை சிக்கன் பிரியாணி உணவு, சாலட் ஆகிய உணவுகளை வாங்கி அஞ்சுஸ்ரீயும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுள்ளனர்.

ஆனால் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குடும்பத்தினர் அனைவருக்கும் வயிற்று வலி ஏற்பட்டு உடல்நலம் பாதித்துள்ளது. அஞ்சுஸ்ரீயின் தாயார் அம்பிகா, அவரது சகோதரர் ஸ்ரீகுமார், உறவினர் ஸ்ரீநந்தா, அனுஸ்ரீ என ஹோட்டல் உணவு சாப்பிட்ட 5 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில், அஞ்சுஸ்ரீக்கு மட்டும் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

இதனால் அவர் காசர்கோடு மருத்துமனையில் ஜனவரி 1ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். ஆனால் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில், அங்கிருந்து நேற்று காலை மங்களூருவில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனிற்றி இன்று காலை 5 மணி அளவில் இளம் பெண் அஞ்சுஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் காசர்கோடு அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரை பிடித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பைக்கில் ரைட் வர மறுத்த பெண்ணை ஹெல்மெட்டால் தாக்கிய நபர்...அதிர்ச்சி வீடியோ...!

உரிய தரத்தை பின்பற்றாத ஹோட்டல்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே, ஜனவரி 3ஆம் தேதி அன்று கேரளாவின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த 33 வயது செவிலி பெண் ஹோட்டல் உணவு சாப்பிட்டு உயிரிழந்தார். தொடர்ந்து மற்றொரு இளம் பெண் உயிரிழந்தது அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

First published:

Tags: Briyani, Food poison, Girl dead, Kerala