குடியரசுத்தலைவர் பாராட்டிய மாணவியை கடத்தி கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்!

news18
Updated: September 14, 2018, 4:23 PM IST
குடியரசுத்தலைவர் பாராட்டிய மாணவியை கடத்தி கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்!
கோப்புப் படம்
news18
Updated: September 14, 2018, 4:23 PM IST
ஹரியானா மாநிலத்தில் சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பெற்று குடியரசுத்தலைவரால் பாராட்டப்பட்ட 19 வயது கல்லூரி மாணவி கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவி, சம்பவம் நடந்த புதன்கிழமையன்று கோச்சிங் சென்டரிலிருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் 5-க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் வழிமறித்து காரில் அப்பெண்ணை கடத்தி சென்றனர். மாணவியை ஒதுக்குப்புறமான இடத்திற்கு தூக்கிச்சென்று மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கனினா என்ற பகுதியில் உள்ள பேருந்து நிறுத்ததில் அந்தப் பெண்ணை காரிலிருந்து கீழே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

ஹரியானா மாநிலம் ரிவாரியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால், சம்பவம் நடந்த இடம் மகேந்திர்கர் எல்லைக்குட்பட்டது என்பதால் புகாரை எடுத்துக்கொள்ள போலீசார் மறுத்துள்ளனர். ரிவாரி காவல் நிலையத்தில் புகாரை எடுத்துக்கொள்ள மறுத்ததால் அடுத்தடுத்த காவல்நிலையங்களுக்கு சென்றனர். மற்ற புகாரை எடுத்துக்கொள்வார்கள் என்று நம்பி பெண்ணின் பெற்றோர் அலைந்து திரிந்துள்ளனர். ஆனால் எந்தவொரு காவல் நிலையமும் புகாரை எடுத்துக்கொள்ளவில்லை. குற்றவாளிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை.

பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இந்த நாட்டில், பெண் குழந்தையை எப்படி பாதுகாக்க முடியும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் உருக்கமாக கூறியுள்ளார்.
First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...