டெல்லியில் 19 வயதான இளைஞன் பப்ஜி (PUBG) என்ற ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையானவர், தன் பெற்றோரையும் சகோதரியையும் திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த சுராஜ் எனும் இளைஞர் பப்ஜி என்ற ஆன்லைன் கேம்மிற்கு அடிக்ட் ஆகியுள்ளார். கேம் விளையாடுவதற்காகவே வாட்ஸ் அப் குரூப் நண்பர்களுடன் இணைந்து தனியாக அறையை வாடகைக்கு எடுத்தும் சுராஜ் தங்கியுள்ளார். தினமும் கல்லூரி செல்வதாக வீட்டில் பொய் சொல்லி விட்டு காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை விளையாடுவதையே வழக்கமாகவும் அவர் கொண்டுள்ளார்.
சுராஜின் இந்த நடவடிக்கை அறிந்திருந்த சகோதரி அதை தன் பெற்றோர்களிடமும் கூறியுள்ளார். இதை அறிந்த பெற்றோர்கள் சுராஜின் நடவடிக்கையை கண்டித்துள்ளனர். மேலும், கட்டாயமாக கல்லூரி போக வேண்டு என்று வற்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் எப்போதும் போல் மாலை வீட்டிற்கு வந்த சுராஜ் என்றுமில்லாமல் திடீரென வீட்டில் உள்ள ஆல்பங்களை எல்லாம் தூங்கும்வரை பார்த்து கொண்டிருந்துள்ளான்.
அதிகாலை 3 மணியளவில் பெற்றோர் இருவரும் அறையில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், அவர் இருவரையும் சுராஜ் கொலை செய்துள்ளான். பின் தன்னைப் பற்றி பெற்றோரிடம் சொன்ன சகோதரியின் அறைக்குச் சென்று அவரையும் கழுத்தை அறுத்து கொன்றுள்ளான். பின் வீட்டில் கொள்ளை நடந்ததுபோல் பொருட்களை கலைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தகவலறிந்து வீட்டின் அருகில் உள்ள நபர்கள் போலீஸில் புகார் செய்துள்ளனர். விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் குற்றவாளி சுராஜ் கைது செய்தனர்.
பெற்றோர்களுக்கான இறுதிச் சடங்கை செய்வதற்கு கூட சுராஜின் உறவினர் அவனை ஜாமினில் எடுக்கவில்லை. சுராஜின் அண்ணனே இறுதிச் சடங்கை செய்வதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட கொலையாளி சுராஜ் ‘என்னை தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள்’ என்று மட்டுமே தொடர்ச்சியாக கூறி வருவதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.
மேலும் விசாரணையில், பப்ஜி கேம் விளையாடுவதற்காக இணைந்த குரூப்பில் உள்ள மற்ற 10 நபர்களையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். சாதாரண கேம்மிற்காக குடும்பத்தை கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Addicted to Online Game, Killed Parents and Sister, Online Game PUBG