ரயில் கழிவறையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 19 வயது இளைஞர்

ரயில் கழிவறையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 19 வயது இளைஞர்

கோப்பு படம்

கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிறுமியை வலுகட்டாயமாக அழைத்து சென்ற இளைஞர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

  • Share this:
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டம் கொண்ட வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிராக மாநில போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்த போதும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிப்பறையில் 19 வயது சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மஹாராஷ்டிராவின் தானே போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிறுமியை வலுகட்டாயமாக அழைத்து சென்ற இளைஞர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தானே காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “19 வயது இளைஞரும், சிறுமியும் ஒன்றாக பயணித்து உள்ளனர். சிறுமியை கழிவறைக்கு அழைத்து சென்றுள்ள இளைஞர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி மும்பையில் உள்ள குரார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது எங்களிடம் மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது“ என்றார்.
Published by:Vijay R
First published: