• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 60 வயது பெண்ணை கொலை செய்து சடலத்துடன் உடலுறவு கொண்ட ‘சைக்கோ’ இளைஞர்!

60 வயது பெண்ணை கொலை செய்து சடலத்துடன் உடலுறவு கொண்ட ‘சைக்கோ’ இளைஞர்!

Necrophilia

Necrophilia

இறந்தவர்களின் உடல்களுடன் உடலுறவு கொள்வதற்கு நெக்ரோபிலியா என்று பெயர்.

  • Share this:
60 வயது பெண்ணை கொலை செய்து சடலுத்துடன் உடலுறவு கொண்ட 19 வயதாகும் ‘சைக்கோ’ இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் அவ்வப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கும், ஆனால் பாலியல் வன்புணர்வு குற்றத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்ற சம்பவம் ஒன்று ராஜஸ்தானில் அரங்கேறியிருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தில் பிலிபங்கா காவல்நிலைய எல்லைப் பகுதியில் தான் அந்த அதிரவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமையன்று இரவு 60 வயதாகும் கணவனை இழந்த கைப்பெண் ஒருவரின் வீட்டினுள் நுழைந்த 19 வயது இளைஞர் ஒருவர் அப்பெண்மணியை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்துள்ளான், அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து போராடவே, ஆத்திரத்தில் அப்பெண்ணை அந்த வாலிபர் கொலை செய்திருக்கிறார்.

பின்னர் தனது காம இச்சையை அந்தப் பெண்ணின் சடலுத்துடன் நிகழ்த்தியிருக்கிறார் அந்த இளைஞர். ஆம் கொல்லப்பட்ட அந்த பெண்ணின் சடலத்துடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கிறார் அவர். இதுமட்டுமல்லாமல் இச்சம்பவம் குறித்து அந்த பெண்ணின் உறவினரிடமும் தெரிவித்திருக்கிறார் அந்த இளைஞர்.

Also Read:  யூடியூப்பில் மாதம் 4 லட்சம் வருமானம் ஈட்டும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

இதனிடையே அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் உறவினர் உடனடியாக பிலிபங்கா காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 19 வயது இளைஞரின் பெயர் சுரேந்தர் எனும் மாண்டியா.

கைது செய்யப்பட்ட சுரேந்தர் மீது நெக்ரோபிலியா, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல்களுடன் உடலுறவு கொள்வதற்கு நெக்ரோபிலியா என்று பெயர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட அந்த சைக்கோ வாலிபர் சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன்னரே கொலை செய்யப்பட்ட பெண்மணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அவருடைய மொபைல் போனை பறித்துச் சென்றதாக போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

Also Read:    மகளிர்நல அமைச்சகத்தையே கலைத்த தாலிபான்கள் – அட்ராசிட்டி ஆரம்பம்!

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த 2020ம் ஆண்டில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நடந்தது ராஜஸ்தானில் தான். உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

ராஜஸ்தானில் 2020ம் ஆண்டில் மட்டும் 5310 பாலியல் வன்புணர்வு குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இது குறித்து ராஜஸ்தான் டிஜிபி கூறுகையில், மொத்தம் பதிவான பாலியல் குற்ற வழக்குகளில் 43% போலியானவை என்றும் தனிநபரை சிக்க வைக்கும் வகையில் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: