PSLV-C51 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட 19 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன!

PSLV-C51 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட 19 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன!

பி.எஸ்.எல்.வி. சி51

PSLV C-51 ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான 25 மணி 30 நிமிட கவுன்டவுன், நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது. திட்டமிட்டபடி இன்று காலை 10.24 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைக் கோள்களுடன், ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

  • Share this:
    PSLV C-51 ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான 25 மணி 30 நிமிட கவுன்டவுன், நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது. திட்டமிட்டபடி இன்று காலை 10.24 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைக் கோள்களுடன், ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. 2021-ம் ஆண்டில் ஏவப்படும், இஸ்ரோவின் முதல் ராக்கெட் இதுவாகும். பிஎஸ்எல்வி வரிசையில் இன்று 59-வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது

    விண்ணில் ஏவப்பட்ட ஒரு மணி நேரம் 51 நிமிடம் 32 நொடிகளில் செயற்கைக்கோள்கள் அனைத்தும் வெற்றிகரமாக அவற்றின் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

    ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரேசில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் Marcos cesar Pontes-ம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதை கண்டு களித்தார். கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், பிரேசிலின் முதல் செயற்கைகோளை இந்தியா ஏவியிருப்பது மிகவும் பெருமைக்குரியது என்றார்.

    பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதற்கு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பிரேசில் அதிபர் பொல்சனாரோவிற்கும் வாழ்த்து கூறியுள்ளார்.
    Published by:Ram Sankar
    First published: