கேரள விமான விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 19-ஆக உயர்வு..

துபாயில் இருந்து 190 பயணிகளுடன் கேரளாவிலுள்ள கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்று தரையிறங்கிய விமானம்  ஓடுதளத்தில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது. 

கேரள விமான விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 19-ஆக உயர்வு..
கேரள விமான விபத்து
  • Share this:
துபாயில் இருந்து 190 பயணிகளுடன் கேரளாவிலுள்ள கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்று தரையிறங்கிய விமானம்  ஓடுதளத்தில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது. 

துபாயில் இருந்து 190 பயணிகளுடன் கேரளாவிலுள்ள கோழிக்கோடு விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் 35 அடியில் இறங்கும்போது இரண்டு துண்டாக உடைந்து உள்ளது. விமானத்தில் இருந்த பலர் காயமடைந்து உள்ளனர். 19 பேர்  உயிரிழந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்து, மீட்கப்பட்டவர்கள் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கை முடிந்து மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்திருக்கும் முதல்வர் பினராயி விஜயன், பயணிகளைக் குறித்த தகவல்களுக்கு, உதவிகளுக்கு நாடவேண்டிய ஹெல்ப்லைன் எண்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
First published: August 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading