ஹோம் /நியூஸ் /இந்தியா /

சென்னை ஓடிஏ பயிற்சி நிறைவு : 36 வெளிநாட்டு வீரர்களோடு 186 ராணுவ அதிகாரிகள் நாட்டுப்பணியில் சேர்ந்தனர்!

சென்னை ஓடிஏ பயிற்சி நிறைவு : 36 வெளிநாட்டு வீரர்களோடு 186 ராணுவ அதிகாரிகள் நாட்டுப்பணியில் சேர்ந்தனர்!

நாட்டுப்பணியில் இணைந்த 186 ராணுவ அதிகாரிகள்

நாட்டுப்பணியில் இணைந்த 186 ராணுவ அதிகாரிகள்

தன் கணவரது மரணத்திற்கு பிறகு தனது கணவனது கடமையை தன் கடனாக ஏற்று ஒன்றரை வயது மகனை பெற்றோர் பொறுப்பில் விட்டுவிட்டு ராணுவ அதிகாரிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று இப்போது அதிகாரியாக நாட்டிற்கு சேவை செய்ய வந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (OTA) சனிக்கிழமை நடைபெற்ற பாஸ்சிங் அவுட் அணிவகுப்பின் போது, ​​186 வீரர்கள் இந்திய ராணுவத்தின் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் சேவைகளில் அதிகாரிகளாக பட்டம் பெற்றனர்.

அதில் 159 ஆண்கள் மற்றும் 63 பெண்கள் அடங்குவர். அணிவகுப்பில் தேர்ச்சி பெற்ற கேடட்களில் இரண்டு வீரமரணம் அடைந்த வீரர்களின் மனைவிகளும் அடங்குவர். இந்திய விமானப் படையின் மூன்று சீட்டா மற்றும் சேடக் ஹெலிகாப்டர்கள் மூலம் கேடட்கள் மீது மலர்களை பொழிந்து நட்டு பணிக்கு வரவேற்றனர்.

ஹர்வீன் கவுர் கஹ்லோன்:

பஞ்சாப்பைச் சேர்ந்த 28 வயதான ஹர்வீன் கவுர் கஹ்லோன் மாநிலத்தில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில் வேதியியல் ஆசிரியராக இருந்த அவரது வாழ்க்கையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டது. அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தபோது, ​​பீரங்கி பிரிவில் பணியாற்றிய அவரது கணவர் ஜூன் 2019 இல் மாரடைப்பால் இறந்தார்.

தன் கணவரது மரணத்திற்கு பிறகு தனது கணவனது கடமையை தன் கடனாக ஏற்று ஒன்றரை வயது மகனை பெற்றோர் பொறுப்பில் விட்டுவிட்டு, ராணுவ அதிகாரிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று இப்போது அதிகாரியாக நாட்டிற்கு சேவை செய்ய வந்துள்ளார். 11 மாதம் தனது மகனை பிரிந்து இருந்த அவர் இப்போது அதிகாரியாக அவனை ஏந்தி நெகிச்சி அடைந்தார். அவன் பார்க்காத தந்தை எப்படி வாழ்ந்தார் என்று நான் காட்டுவேன் என்று கூறினார்.

ரிக்ஜின் சோரோல்:

லடாக் சாரணர் மூன்றாவது பட்டாலியனில் பணியாற்றி வந்த ரிக்ஜின் கந்தப் மாரடைப்பால் இறந்தார். அவரது மகனுக்கு அப்போது நான்கு மாத குழந்தை. அவரது மனைவி ரிக்ஜின் சோரோல் தனது 32 வயதில் நாட்டுப்பணியில் இணைந்துள்ளார்.

“அகாடமியில் இருந்து வெளியேறியபோது ஹெலிகாப்டர்கள் மலர்களைப் பொழிந்தபோது, ​​​​என் கணவர் என்னைப் பற்றி பெருமைப்படுவார் என்று நான் நம்பினேன் ”என்று லடாக்கின் முதல் பெண் இராணுவ அதிகாரி சோரோல் கூறினார்

அகாடமியில் சகோதரிகள்

23 வயதான ஷிவானி திவாரி, OTAவில் தனது பயிற்சியை முடித்து, அகாடமியில் தேர்ச்சி பெற்ற நிலையில், அவரது தங்கை சுமேதா திவாரி அதே அகாடமியில் தற்போது பயிற்சியில் உள்ளார். அவர்கள் குடும்பத்தில் பாதுகாப்பு சீருடை பணியில் இணைந்த நான்காவது தலைமுறையினர்யாக மாறியுள்ளனர். இவர்களது தந்தை கடற்படையில் பணியாற்றி வருகிறார்.

இந்த அணிவகுப்பை ராயல் பூட்டான் ராணுவத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் படூ ஷெரிங் மதிப்பாய்வு செய்தார். பெங்களுருவில் உள்ள ராஷ்டிரிய ராணுவப் பள்ளியின் முன்னாள் மாணவியான எம்.பவித்ராவிற்கு , சிறந்த கேடட்டாக இருந்ததற்காக கௌரவ வாள் மற்றும் அகாடமி வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.

வெளிநாட்டு கேடட்கள்:

பாசிங் அவுட் அணிவகுப்பில் 186 இந்திய கேடட்களும், 36 வெளிநாட்டு கேடட்களும் அடங்குவர். வெளிநாட்டு கேடட்கள் அனைவரும் தங்கள் நாட்டுக்கு சேவை செய்ய அனுப்பப்படுவார்கள் என்று செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு கேடட்களில் 30 பேர் பூட்டானைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர் மாலத்தீவுகள் மற்றும் இருவர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள்.

இதையும் படிங்க: குஜராத்தில் போர் விமான தொழிற்சாலை - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

சோனம் யாங்சென்:

ராயல் பூட்டான் இராணுவத்தில் லெப்டினன்ட்களாக சேர இருக்கும் 30 கேடட்களில் ஒருவர் சோனம் யாங்சென். ராயல் பூட்டான் ராணுவத்தின் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான தனது தந்தையின் பாதையை பின்பற்ற 23 வயதான அறிவியல் பட்டதாரியான சோனம் யாங்சென், பயிற்சியின் தொடக்கத்தில் சவாலான சென்னை வானிலையை தாக்குப்பிடிக்க போராடினார். பின்னர் தன்னை தானே அதற்கு தகவமைத்துக் கொண்டு இப்போது முழு பயிற்சியும் மேற்கொண்டு நாடு திரும்புகிறார்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Army, Chennai, Indian army, Maldives, Nepal, Nigeria