அசாம் வனத்தில் 18 யானைகள் உயிரிழப்பு - மின்னல் தாக்கியதில் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கும் வனத்துறை

யானை

யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் அவை குடியிருப்பு பகுதிகளுக்குள் படையெடுக்கின்றன.

 • Share this:
  அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 18 யானைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில வனத்துறை தெரிவித்துள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியான கத்தியடோலி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. புதன்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் யானைகள் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இன்று  கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் வந்து பார்வையிட்டுள்ளனர். 4 யானைகளின் உடல்கள் மலை அடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்ற யானைகளில் உடல்கள் மலைமீது இருந்துள்ளது. இதில் 3 யானைகளின் உடல்கள் கருகியுள்ளதாக வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  யானைகளின் இறப்பு குறித்த சரியான காரணம் தெரியவில்லை. மின்னல் தாக்கியதில் யானைகள் இறந்திருக்கலாம் என வனத்துறை சந்தேகிக்கின்றனர். உடற்கூராய்வுக்கு பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  யானைகள் தந்தம், தோல்களுக்காக வேட்டையாடப்படும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.  இந்தியாவில் யானை மனித மோதல்கள் அதிகரித்து வருகின்றன. யானை மந்தைகள் ஒரு ஆண்டுக்கு சுமார் 400 முதல் 500 சதுர கி.மீ வரை உணவுக்காக பயணிக்கின்றன. இந்த பயணத்தின் போது யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் அவை குடியிருப்பு பகுதிகளுக்குள் படையெடுக்கின்றன. அவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் நுழையும் யானைகளை விரட்ட மக்கள் எடுக்கும் விபரீத முயற்சிகளால் யானைகள் கொல்லப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

  மேலும் படிக்க: இணையத்தை கலங்கடித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் புகைப்படம்

  அசாமில் வனத்துக்குள் 18 யானைகள் உயிரிழந்திருப்பது விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுதியுள்ளது. மின்னல்கள் தாக்கி இத்தனை யானைகள் இறக்க வாய்ப்பில்லை. உணவில் விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என விலங்குகள் நல ஆர்வலர்கள் சந்தேகிக்கின்றனர். பிரேத பரிசோதனைகள் முழுமையான தகவல்கள் தெரியவரும் என்கின்றனர்.
  Published by:Ramprasath H
  First published: