ஹோம் /நியூஸ் /இந்தியா /

தண்ணிகூட கொடுக்கல.. நடுக்கடலில் தமிழர்களை சிறைபிடித்த கினியா கடற்படை.. கண்ணீர் மல்க வீடியோ!

தண்ணிகூட கொடுக்கல.. நடுக்கடலில் தமிழர்களை சிறைபிடித்த கினியா கடற்படை.. கண்ணீர் மல்க வீடியோ!

சிறைபிடிக்கப்பட்டவர்கள்

சிறைபிடிக்கப்பட்டவர்கள்

அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்காமல் தனி அறையில் அடைத்து வைத்து சித்தரவதை செய்வதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, IndiaEquatorial GuineaEquatorial Guinea

கப்பலில் வேலைக்குச் சென்ற 3 தமிழர்கள், 18 இந்தியர்கள் ஈக்குவேடார் கினியா நாட்டில் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களை மீட்கக்கோரி இந்திய, இலங்கை அரசிற்கு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 21ஆன் தேதி தென் ஆப்ரிக்கா நாட்டில் உள்ள போர்ட் எலிசபெத் துறைமுகத்தில் இருந்து நைஜீரியா நாட்டிற்கு ஹிரோயிக் இடுன் கப்பல் புறப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி நைஜீரியா நோக்கி சென்று கொண்டிருந்த இந்த கப்பலை, ஈக்குவடோரியல் கினியா நாட்டின் கடற்படை சிறைப்பிடித்து மலபோவிற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இந்த பயணித்த 26 பேரில் 18 பேர் இந்தியர்கள், 3 பேர் தமிழர்கள் ஆவார்கள். ஆகஸ்ட் 14 ஆம் தேதி லூபா பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த இந்த கப்பலில் இருந்து 15 பேர் விசாரணைக்காக கரைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் கப்பலில் இருந்த சரக்குகளை அந்நாட்டு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் மீண்டும் கப்பலுக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், கப்பலில் உள்ள பயணிகள், அவர்கள் ஒரு மாதமாக ஈக்குவேடார் கினியா நாட்டில் உள்ள லூபா துறைமுகத்தில் சட்டவிரோதமாக சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்காமல் தனி அறையில் அடைத்து வைத்து சித்தரவதை செய்வதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

தடுத்து நிறுத்திய போலீஸ்.. நடுரோட்டில் அமர்ந்த தேமுதிகவினர்.. பேசி முடித்த பிரேமலதா! (news18.com)

மேலும் சிறைபிடிக்கப்பட்டவர்களை நைஜீரியா ராணுவத்திடம் சட்டவிரோதமாக ஒப்படைக்க எக்குவடோரியல் கினியா கடற்படை முயற்சிப்பதாகவும் கப்பலில் பயணித்தவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். மேலும் இந்திய மற்றும் இலங்கை அரசுகள் தலையிட்டு அவர்களை மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Indian Navy