Home /News /national /

குஜராத்தில் இறந்த நிலையில் மோசமாக சிதைந்து கரை ஒதுங்கிய 18 அடி நீள திமிங்கலம்.!

குஜராத்தில் இறந்த நிலையில் மோசமாக சிதைந்து கரை ஒதுங்கிய 18 அடி நீள திமிங்கலம்.!

மோசமாக சிதைந்து கரை ஒதுங்கிய 18 அடி நீள திமிங்கலம்

மோசமாக சிதைந்து கரை ஒதுங்கிய 18 அடி நீள திமிங்கலம்

இறந்து கரை ஒதுங்கிய 18 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலத்தின் சடலம் மோசமாக சிதைந்து போயிருந்தது. இதனால் அது எந்த இனத்தை சேர்ந்தது என்று வன அதிகாரிகளால் அடையாளம் காண முடியவில்லை.

இந்தியாவில் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் கீழ் திமிங்கலங்கள் அரிய வகை உயிரினங்கள் பட்டியலில் அட்டவணை -1 இனங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. இதனிடையே குஜராத்தின் வல்சாத் (Valsad) மாவட்டத்தில் நர்கோல் கடற்கரைக்கு (Nargol beach) அருகிலுள்ள மல்வான் (Malvan) பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு (மே 26 புதன்கிழமை), 18 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலத்தின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இறந்து கரை ஒதுங்கிய 18 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலத்தின் சடலம் மோசமாக சிதைந்து போயிருந்தது. ராட்சத திமிங்கலம் மோசமாக சிதைந்திருந்த காரணத்தால் அது எந்த இனத்தை சேர்ந்தது என்று வன அதிகாரிகளால் அடையாளம் காண முடியவில்லை. வன அதிகாரிகள் விசாரணைக்காக திமிங்கலத்தின் சடலத்திலிருந்து சாம்பிள்ஸ்களை சேகரித்துள்ளனர்.

முன்னதாக கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலத்தின் சடலத்தை கண்ட உள்ளூர்வாசிகள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவல் கிடைக்க பெற்ற அதிகாரிகள், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவையான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர்.

ALSO READ | 'வழக்கு செலவுகளுக்கு பணம் தாருங்கள்'... நிதி கேட்டு விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்திலேயே கூடியிருந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வன அதிகாரிகள் குழு அந்த இடத்தை பார்வையிட்டு, இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம் கொல்லப்பட்டு உயிரிழந்ததா அல்லது இயற்கையாகவே இறந்ததா என்பது பற்றி அறிந்து கொள்ள அதிகாரிகள் சாம்பிள்ஸ் சேகரித்தனர். இது குறித்து பேசிய வனதுணை பாதுகாவலர் யது பரத்வாஜ், கரை ஒதுங்கிய 18 அடி நீள திமிங்கலத்தின் சடலம் கடுமையாக சிதைந்திருப்பதால், பிரேத பரிசோதனை செய்வது சாத்தியமில்லை.

எனவே தான் இந்த திமிங்கலத்தின் மரணம் இயற்கையா அல்லது கொல்லப்பட்டதா என்பதை அறிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இறந்த திமிங்கலம் சுமார் எட்டு அடி அகலம் கொண்டது. இதன் பெரிய அளவு காரணமாக, நாங்கள் அதை எப்படி அகற்றுவது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

ALSO READ |  சீக்கிய மகளிர் குழு உதவியுடன் சப்பாத்தி தயாரித்து மகிழ்ந்த இளவரசர் வில்லியம் மற்றும் மனைவி கேட்!- வைரல் வீடியோ

அரசு விதிகளின்படி இறந்த திமிங்கலத்தை தகனம் அல்லது அடக்கம் செய்வது என இரண்டுக்கும் அனுமதி உண்டு. ஆனால் 18 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட இதன் அளவை பார்த்தால் அடக்கம் செய்வதே சரியான தேர்வாக இருக்கும். ஆனால் இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார். மற்றொரு அதிகாரி திமிங்கலம் பல நாட்களுக்கு முன்பு இறந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். சில விரிவான பரிசோதனைகளை தொடர்ந்து திமிங்கலம் இறந்த நேரத்தை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ |  டயானா மரண சர்ச்சை: மன்னிப்பு கோரினார் பத்திரிகையாளர் மார்ட்டின் பஷீர்

சமீப நாட்களாக திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கும் நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடக்கும் பொதுவான ஒரு நிகழ்வாக இருக்கிறது. வங்காள விரிகுடாவில் இறந்த திமிங்கலம் ஒன்று ஆந்திரா மீனவர் குழுவால் அடையாளம் காணப்பட்டது .

ஜனவரி 2021-ல், தெற்கு இத்தாலியில் ஒரு கடலில் இருந்து ஒரு பெரிய திமிங்கலத்தின் சடலம் மீட்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் 36 அடி நீளமுள்ள திமிங்கலத்தின் சடலம் கரை ஒதுங்கியது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Gujarat, Whale shark

அடுத்த செய்தி