Home /News /national /

கேரளாவில் 18 நாள், உத்தரப் பிரதேசத்தில் வெறும் 2 நாள்.. இது தான் பாஜகவை எதிர்ப்பதா? ராகுலுக்கு மார்க்சிஸ்ட் கேள்வி

கேரளாவில் 18 நாள், உத்தரப் பிரதேசத்தில் வெறும் 2 நாள்.. இது தான் பாஜகவை எதிர்ப்பதா? ராகுலுக்கு மார்க்சிஸ்ட் கேள்வி

ராகுல் காந்தி மீது மார்க்சிஸ்ட் விமர்சனம்

ராகுல் காந்தி மீது மார்க்சிஸ்ட் விமர்சனம்

Bharat jodo Yatra:ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பயணத் திட்டத்தை விமர்சித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India
    காங்கிரஸ் கட்சியின் “பாரத் ஜோடோ யாத்ரா” என அழைக்கப்படும் இந்திய ஒற்றுமை பயணம் செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் கொடுத்து பயணத்தை தொடங்கி வைத்தார். கடந்த சனிக்கிழமை தமிழக பயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி, தற்போது கேரளாவில் தனது பயணத்தை மேற்கொண்டுவருகிறார்.

    கேரளாவில் அவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், கே.சி வேணுகோபால், சசி தரூர், உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்டோர் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர்.

    கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. பாஜகவின் மோசமான ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து இந்திய மக்களை ஒன்று திரட்டி 2024இல் பாஜக ஆட்சியை விட்டு அகற்றுவதே இந்த பாரத் ஜோடோ பயணத்தின் நோக்கம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தியின் பயணத் திட்டத்தில் கேரளா மாநிலத்தில் தான் அதிக நேரம் மற்றும் தூரம் பயணம் செல்லவுள்ளார். கேரளாவிலோ மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியிலும்,பாஜக மூன்றாவது இடத்திலும் உள்ள நிலையில், அங்கு தான் அதிக நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளது.


    ராகுலின் கார்டூன் படத்தை வைத்து வெளியிட்டுள்ள அந்த பதிவில், கேரளாவில் 18 நாள் பயணம், உத்தரப் பிரதேசத்தில் வெறும் 2 நாள் பயணம். இப்படி தான் வித்தியாசமாக பாஜக-ஆர்எஸ்எஸ்ஐ எதிர்ப்பீர்களா. இந்தியாவை சேர்க்கிறீர்களா அல்லது சீட்டுகளை சேர்க்கிறீர்களா என விமர்சித்து பதிவு வெளியிட்டுள்ளது.

    இதையும் படிங்க: சொந்த தொகுதியில் வெற்றிப்பெறாத அண்ணாமலை தான் ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க போகிறாரா? - தெலங்கானா முதலமைச்சர் கேள்வி

    தென்மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக அல்லாத கட்சிகள் தான் ஆட்சி நடத்துகின்றன. ஆனால், ராகுலின் பயணத்தில் தென் மாநிலங்களுக்கு குறிப்பாக கேரளா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு வட மாநிலங்களை விட அதிக நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நாட்டின் மிகப் பெரிய மாநிலமான பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் வெறும் 2 நாள்கள் மட்டுமே பயணத் திட்டம் உள்ளது.

    இதை, ‘பாஜகவை எதிர்க்கிறேன் என்று கூறினால் அந்த கட்சி ஆட்சியில் உள்ள வலுவாக தடம் பதித்துள்ள மாநிலத்தில் தானே ராகுல் களமிறங்க வேண்டும்’ என காங்கிரஸ் அல்லாத சில எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்தை யாத்திரை திட்டத்தில் ராகுல் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Kannan V
    First published:

    Tags: CPM, Kerala, Rahul gandhi, Uttar pradesh

    அடுத்த செய்தி