தாயின் தவறான பழக்கத்தால் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹலசூரு பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 வருடங்களாக கணவனை பிரித்து வசித்து வருகிறார். வீட்டுவேலை செய்து தனது குடும்பத்தை கவனித்து வருகிறார். கீதாவுக்கு ஃபேஸ்புக் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
Also Read: மசினக்குடி புலிக்கு ஏன் MT23 என பெயர் வைத்தார்கள்?.. அதை பிடிக்க ஏன் இவ்வளவு போராட்டம்
இதன்காரணமாக சக்திவேல் அடிக்கடி கீதாவை சந்திப்பதற்காக வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். வீட்டில் குழந்தைகள் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் கீதாவின் 17 வயது மகன் நந்துவுக்கு சக்திவேல் வீட்டிற்கு வருவது பிடிக்கவில்லை. இதுகுறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். சக்திவேல் வீட்டிற்கு வரும்போது அவருடன் சண்டைப்போட்டுள்ளார். சக்திவேலுக்கும் 17 வயது சிறுவனுக்கு அடிக்கடி தகராறு நடந்துவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 4-ம் தேதி இரவு கீதாவை சந்திப்பதற்காக சக்திவேல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுவனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்த வந்து சிறுவனை குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கீதா தனது மகனை அக்கம்பக்கத்தினரின் உதவியோடு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.
இந்தச்சம்பவம் குறித்து ஹலசூரு பகுதி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் சிறுவனின் உடலை பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுவனின் தாய் கீதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலையில் கீதாவுக்கு தொடர்பு குறித்து விசாரித்தனர். போலீஸாரின் விசாரணையில் சக்திவேல் தனது மகனை கத்தியால் குத்த வரும்போது வேண்டாம் என தடுத்ததாகவும் ஆத்திரத்தில் இருந்த சக்திவேல் மகனை கத்தியால் குத்தியதாக தெரிவித்துள்ளார்.
சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த ஆட்டோ டிரைவர் சக்திவேலை போலீஸார் கைது செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கள்ளக்காதலியின் வீட்டுக்கு செல்வதற்கு அவரது மகன் இடையூறாக இருந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறியுள்ளார். தாயின் தவறான பழக்கத்தால் மகன் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Child murdered, Children death, Crime News, Illegal affair, Illegal relationship, Karnataka