Home /News /national /

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கற்பிக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு!

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கற்பிக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு!

News 18 creatives

News 18 creatives

தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே நீடிக்கும் என்று ஆளும் அதிமுக அரசு உறுதியாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
    இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஆசிரியர்களை நியமிக்க பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    மக்களவையில் நேற்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். உயர்கல்விக்கொள்கையை வகுக்க தனி ஆணையம் அமைக்கப்படும், இந்தியாவில் படிப்போம் என்ற திட்டம் உருவாக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

    இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஆசிரியர்களை நியமித்து, இந்தியை கற்பிக்க பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், புதிய திட்டத்தின் படி 25 சதவிகிதத்திற்கும் மேலாக உருது பேசும் மக்கள் இருந்தால், அப்பகுதியில் உருது ஆசிரியர்களை நியமிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையில், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மூன்றாவது மொழியாக கட்டாயம் என்ற அறிவிப்புக்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

    எதிர்ப்பை அடுத்து இந்தி கட்டாயம் என்ற வார்த்தப்பதம் மட்டும் நீக்கப்பட்டது. மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு மொழி கற்பிக்கப்படும் என்பது தொடர்ந்து இருக்கிறது.

    தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே நீடிக்கும் என்று ஆளும் அதிமுக அரசு உறுதியாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Published by:Sankar
    First published:

    Tags: Imposing Hindi, Nirmala Sitharaman, Union Budget 2019

    அடுத்த செய்தி