Home /News /national /

இத்தாலியில் இருந்து ஒரே விமானத்தில் வந்த 173 பேருக்கு கொரோனா தொற்று

இத்தாலியில் இருந்து ஒரே விமானத்தில் வந்த 173 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒட்டுமொத்த விபரங்கள் பெறப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு செய்து வருகின்றனர்.

    இத்தாலி நாட்டிலிருந்து பஞ்சாபுக்கு ஒரே விமானத்தில் வந்த 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் மேலதிக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவரும்.

    இதையும் படிங்க : இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எப்போது குறையும்? ஆய்வு தகவல்கள் வெளியீடு

    உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் சர்வதேச விமான போக்குவரத்து இயக்கப்படாமல் உள்ளது. இந்தியாவில் ஜனவரி 31-ம்தேதி வரை விமானப் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இருப்பினும் சார்ட்டட் ஃப்ளைட் எனப்படும் வாடகை விமானங்கள் மூலம் அத்தியாவசிய தேவை உடையோர் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இத்தாலி நாட்டில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு விமானம் ஒன்று இன்று திரும்பியது.

    இதில் மொத்தம் 210 பேர் இருந்தனர். இன்று நண்பகல் 12.20-க்கு தரையிறங்கிய விமானத்தில் இருந்த அனைவரிடமும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 173 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் ஒரே விமானத்தில் வந்தவர்களிடம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    இதையும் படிங்க : 11 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர்- பீகாரில் அதிர்ச்சி- விசாரணைக்கு உத்தரவு

    இவர்கள் அனைவரும் இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து வந்தவர்கள். முன்னதாக நேற்று இத்தாலியின் மிலன் நகரில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக அமிர்தசரசுக்கு விமானத்தில் வந்தவர்களில் 285 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒட்டுமொத்த விபரங்கள் பெறப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு செய்து வருகின்றனர்.


    கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கோவிட் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தங்களை 7 நாட்களுக்கு கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Omicron

    அடுத்த செய்தி