இருப்பதோ 90 வாக்காளர்கள்... பதிவானதோ 171 வாக்குகள் - அசாம் தேர்தல் குளறுபடி

இருப்பதோ 90 வாக்காளர்கள்... பதிவானதோ 171 வாக்குகள் - அசாம் தேர்தல் குளறுபடி

மாதிரி படம்

திமா ஹாசோ தொகுதிக்குட்பட்ட ஹப்லாங் வாங்குச்சாவடியில் நடந்த குளறுபடிகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

  • Share this:
    அசாம் மாநிலத்தில் மூன்று கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1-ம் தேதி நடந்தது. இதில் அசாம் மாநிலம் மாநிலம் திமா ஹாசோ தொகுதியும் தேர்தலை சந்தித்தது. திமா ஹாசோ தொகுதிக்குட்பட்ட ஹப்லாங் வாங்குச்சாவடியில் நடந்த குளறுபடிகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    ஹப்லாங் பகுதியில் உள்ள வாக்குச்சாவடில் கடந்த ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது அங்கு வந்த கிராமத் தலைவர் ஒருவர் புதிய வாக்காளர் பட்டியலுடன் வந்து, அதன்படி வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த தேர்தல் அலுவலர்களும் இதற்கு இசைந்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில் 90 வாக்காளர்களே உள்ள வாக்குச்சாவடியில் 171 வாக்குகள் பதிவானது. இந்த விவகாரம் தெரியவந்ததை அடுத்து, அங்கு தேர்தல் பணியில் இருந்த 5 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்டத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

    ஒரு கிராமத் தலைவர் பேச்சை எப்படி தேர்தல் அதிகாரிகள் கேட்டனர். இதன்பின்னால் வேறுயாராவது இருக்கின்றனரா என்பது குறித்தும் மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published: