ராஜஸ்தான் மாநிலத்தில் தனது காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் 17 வயது சிறுவன் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாஷ் வியாஸ் என்ற 17 வயது சிறுவன் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் காதலித்து வந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. தனது காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் சோகத்தில் இருந்த சிறுவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மகாத்மா காந்தி மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிசிடிவி பதிவை வைத்து பார்த்த போது சம்பவம் நடைப்பெற்ற அன்று யாஷ் வியாஸ் தனியாக சாலையில் நடந்து செல்வது நன்றாக தெரிகிறது. யாருமில்லாத அந்த சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மட்டும் அவரைக் கடந்து செல்கின்றன. அப்போது அவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொண்டு சாலையில் விழுவது பதிவாகியுள்ளது.
राजस्थान : Girlfriend के लिए युवक ने की आत्महत्या की कोशिश, खुद को मारी गोली ,घायल अवस्था में युवक अस्पताल में भर्ती। pic.twitter.com/Yzn6sRtCBR
— Priya singh (@priyarajputlive) December 9, 2022
இது குறித்து பேசிய பில்வாரா நகரின் சிஓ, நரேந்திர தயாமா, துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட பின்னர் சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஒரு நாள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாகவு, தெரிவித்துள்ளார். மேலும் அவரது உடலானது பிரேத பரிசோதனை செய்த பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் வெளியான இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் பலர் இது தொடர்பாக கமெண்டுகளில் விவாதித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.