ஹோம் /நியூஸ் /இந்தியா /

பாதாள அறையில் பெண்கள்.. கமலின் ‘பாபநாசம்’ பட பாணியில் போலீசுக்கே தண்ணி காட்டிய சம்பவம்

பாதாள அறையில் பெண்கள்.. கமலின் ‘பாபநாசம்’ பட பாணியில் போலீசுக்கே தண்ணி காட்டிய சம்பவம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஊழியர்கள் அனைவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தியிருக்கின்றனர். கமல்ஹாசனின் பாபநாசம் பட பாணியில் அனைவரும் அங்கு பெண்களே கிடையாது என சொல்லி வைத்தது போல ஒரே பதிலை தந்திருக்கின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மதுபான கூடத்தில் இருந்த ரகசிய சுரங்க அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 பெண்களை பெரும் சிரமத்துக்கு பின்னர் போலீசார் மீட்டுள்ளனர். போலீசார் அந்த அறையை கண்டுபிடித்த சுவாரஸ்ய பின்னணியை தற்போது தெரிந்துகொள்வோம்.

  மும்பையின் மிகவும் பிரபலமாக திகழும் அந்தேரி பகுதியில் செயல்பட்டு வரும் ‘தீபா பார்’ என்ற மதுபானக் கூடத்தில், பெண்களை கட்டாயப்படுத்தி நடனமாட வைப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் சென்றது. இதையடுத்து கடந்த சனிக்கிழமையன்று அந்த மதுபானக் கூடத்துக்கு போலீஸ் படை சென்று சோதனையிட்டது. பாத்ரூம், கிட்சன், பொருட்கள் வைக்கும் அறை என அந்த பாரின் அனைத்து பகுதிகளில் சென்று சோதனையிட்ட போதும், அந்த பாரில் நடன அழகிகள் யாரும் இருப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை.

  இதையடுத்து பார் மேலாளர், காசாளர், சர்வர்கள் என அந்த பாரின் ஊழியர்கள் அனைவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தியிருக்கின்றனர். கமல்ஹாசனின் பாபநாசம் பட பாணியில் அனைவரும் அங்கு பெண்களே கிடையாது என சொல்லி வைத்தது போல ஒரே பதிலை தந்திருக்கின்றனர்.

  இதற்கிடையே போலீசார் அங்கிருந்த மேக் அப் அறையில் மிகப்பெரிய கண்ணாடி இருப்பதை பார்த்து சந்தேகித்தனர். அந்த கண்ணாடியை அப்புறப்படுத்தி பார்க்க முடிவு செய்தனர். எத்தனை முறை முயற்சித்த போதும் அந்த கண்ணாடி சுவற்றில் கச்சிதமாக பொருத்தப்பட்டிருந்ததால் போலீசாரால் அந்த கண்ணாடியை அகற்ற முடியாமல் போனது.

  Also read:  தனக்கு வாக்களிக்காதவருக்கு எச்சிலை நக்க வைத்து கொடுமை - தேர்தலில் தோற்றவர் வெறிச்செயல்

  இதன் பின்னர் அந்த கண்ணாடியை உடைத்தே பார்த்து விடுவது என முடிவெடுத்து சுத்தியலால் அடித்து அந்த கண்ணாடியை உடைத்த போது அந்த கண்ணாடிக்கு பின், படங்களில் வருவதைப் போன்று படிக்கட்டுகள் இருந்துள்ளதை பார்த்து திகைத்தனர். அதன் வழியாக கீழிறங்கிச் சென்ற போது அங்கே பாதாளத்தில் ஒரு ரகசிய சுரங்க அறை கண்டறியப்பட்டது. அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 பெண்களை போலீசார் மீட்டனர்.

  அந்த பாதாள அறையில் ஏசி, படுக்கைகள் என அத்தனை பெண்கள் தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் இருந்ததை பார்த்து போலீசாரே கிறுகிறுத்துப் போனார்கள். அங்கிருந்த 17 பெண்களும் அந்த பாரில் நடனமாட பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என தெரியவந்தது. இதையடுத்து அனைத்து பெண்களையும் பத்திரமாக மீட்ட போலீசார், பார் ஊழியர்கள் 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Published by:Arun
  First published:

  Tags: Mumbai