ஹோம் /நியூஸ் /இந்தியா /

BF.7 வகை கொரோனா பரவல்... மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் இன்று அவசர ஆலோசனை..!

BF.7 வகை கொரோனா பரவல்... மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் இன்று அவசர ஆலோசனை..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, கண்காணிப்புகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கொரோனா பரவல் தொடர்பாக மாநில அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சீனாவில் பிஎஃப் 7 வகை கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், இந்தியாவில் அதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. முகக்கவசம் அணிய வேண்டும், தேவையற்ற கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, கண்காணிப்புகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களின் முதலமைச்சர்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி முடித்துள்ளனர்.

Read More : தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் புதுவகை கொரோனா பாதிப்பு ஏற்படும் - மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் தாமாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்த மன்சுக் மாண்டவியா, “இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து இல்லை. பிஎஃப் வைரஸ் இந்தியாவுக்குள் நுழைவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” என்று கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 163 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் இன்று பிற்பகல் 3 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Corona, Corona death, CoronaVirus, Tamil Nadu