கொரோனா பாதிப்பால் 162 மருத்துவர்கள் 107 செவிலியர்கள் உயிரிழந்துள்ளனர் - மத்திய அமைச்சர் விளக்கம்

கொரோனா பாதிப்பால் 162 மருத்துவர்கள் 107 செவிலியர்கள் உயிரிழந்துள்ளனர் - மத்திய அமைச்சர் விளக்கம்

மாதிரி படம்

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு 162 மருத்துவர்களும், 107 செவிலியர்களும், 44 ஆஷா பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை இணைஅமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் மார்ச் மாத தொடக்கத்திலிருந்து கொரோனா பாதிப்பு இருந்துவருகிறது. தொடக்கத்தில் பொதுமக்கள் கொரோனாவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டநிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களும் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் இதுவரையில், 1,07,66,245 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில், 1,54,486 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், மருத்துவப் பணியாளர்களின் உயிரிழப்பு குறித்த விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் இருந்தது.

  இந்தநிலையில், கொரோனாவால் சுகாதாரத்துறை பணியாளர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே பதிலளித்தார்.

  அவருடைய பதிலில், ‘கொரோனா பாதிப்பு தொடங்கியதிலிருந்து ஜனவரி 22-ம் தேதிவரையில் 162 மருத்துவர்கள், 107 செவிலியர்கள், 44 ஆஷா பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். மாநிலங்களிடமிருந்து பெறப்பட்ட தகவலில் அடிப்படையில் இந்த விவரங்கள் வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: