• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • லக்கிம்பூர் வன்முறை: மத்திய அமைச்சரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்: 160 ரயில்கள் சேவை பாதிப்பு

லக்கிம்பூர் வன்முறை: மத்திய அமைச்சரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்: 160 ரயில்கள் சேவை பாதிப்பு

லக்கிம்பூர் வன்முறைக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டத்தால் பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தானில் 160 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரிக்கு மத்திய இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, உத்தர பிரதேச துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் சென்றனர். அவர்களின் வருகைக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, அமைச்சருக்கு பாதுகாப்புக்கு வந்த கார்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது மோதியது. இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனால், ஏற்பட்ட வன்முறையில் பாஜவினர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த சம்பவத்தின் போது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா அங்கு இருந்ததாகவும், அவர் தான் காரை ஓட்டி வந்ததாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து, உத்தர பிரதேச போலீசார் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். எனினும், ஆசிஷ் கைதுசெய்யப்படாமல் இருந்தார். இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்யக்கோரி எதிர்ப்புகள் வலுத்தன. இதையடுத்து, ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.

    எனினும், இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டுமென்றும் விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அவர் பதவிய் இருக்கும் வரை இந்த விவகாரத்தில் நீதி கிடைக்காது.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடத்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.



    அதன்படி, பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்தின் வடக்கு மாவட்டங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சாபிலும் மற்ற இடங்களிலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தனர். இதனால், ஃபெரோஸ்பூர் கோட்டத்திற்கு உட்பட்ட நான்கு பகுதிகளும் போராட்டக்காரர்களால் தடுக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அமைதி நிலையை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் லக்னோ போலீசார் எச்சரித்துள்ளனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி பிரசாந்த் குமார் கூறியதாவது,விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டத்தால் பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தானில் 130 இடங்களில் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 160 ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: