முகப்பு /செய்தி /இந்தியா / பரோட்டா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

பரோட்டா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

பரோட்டா சாப்பிட்டு உயிரிழந்த மாணவி

பரோட்டா சாப்பிட்டு உயிரிழந்த மாணவி

கேரளாவில் 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் பரோட்டா சாப்பிட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

உணவகங்களில் பிரியானி, ஷவர்மா போன்ற உணவுகளை சாப்பிடும் இளைஞர்கள் உயிரிழக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் கேரளா மாநிலத்தில் சமீப காலமாகவே நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், அம்மாநிலத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் பரோட்டா சாப்பிட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாழத்தோப்பு பகுதியில் வசிக்கும் சிஜூ கேப்ரியல் என்பவரின் 16 வயது மகள் நயன் மரியா. இவர் அப்பகுதியில் உள்ள புனிதர் ஜார்ஜ் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நயன் மரியா சில நாள்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் பரோட்டா சாப்பிட்டுள்ளார். இது அவரது வயிற்றில் ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளது. உடல் நலிவுற்று தவித்து வந்த நயன் மரியாவை பெற்றோர் இடுக்கியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று மதியம் உயிரிழந்துள்ளார். இது அவரது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவி நயன் மரியாவுக்கு பரோட்டா போன்ற மைதா மாவு பொருள்கள் சாப்பிடும் போது இதுபோன்ற தொந்தரவுகள் அடிக்கடி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தனது உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவை நிறுத்தாமல் மீண்டும் சாப்பிட்டதால், அந்த உணவு மாணவிக்கு விஷமாக மாறியுள்ளது. பரோட்டா, நூடுல்ஸ், பாஸ்தா, மையோனீஸ் போன்ற உணவுகளில் ருசி அதிகம் இருப்பது போலவே தீங்குகளும் இருப்பதால் இவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

First published:

Tags: Girl dead, Kerala, Parotta