முகப்பு /செய்தி /இந்தியா / தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற 16 வயது மாணவி ரயில் மோதி உயிரிழப்பு!

தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற 16 வயது மாணவி ரயில் மோதி உயிரிழப்பு!

தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற 16 வயது மாணவி ரயில் மோதி உயிரிழப்பு!

தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற 16 வயது மாணவி ரயில் மோதி உயிரிழப்பு!

மங்கலாபுரம் - கோயம்பத்துார் விரைவு ரயிலின் பக்கவாட்டு பகுதி அவர்கள் இருவர் மீதும் எதிர்பாராத விதமாக மோதியதில் அந்த மாணவி ஆற்றில் தூக்கி வீசப்பட்டார்.

  • Last Updated :

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செல்பி மோகத்தால் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற 16 - வயது மாணவி ரயில் மோதி ஆற்றில் விழுந்து உயிரிழந்தார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் நபாத் பதாக் அவருக்கு வயது. 16. இவரது ஆண் நண்பர் இசாம். இவர்கள் இருவரும் பரோக் ரயில்வே பாலத்திற்கு சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்த அவர்கள் தங்களது செல்ஃபோனில் செல்பி எடுக்க முயற்சித்துள்ளனர்.

அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த மங்கலாபுரம் - கோயம்பத்துார் விரைவு ரயிலின் பக்கவாட்டு பகுதி அவர்கள் இருவர் மீதும் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.

இதில் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது ஆண் நண்பர் இசாமுக்கு கை, கால்களில் பலத்த காயங்களுடன் தண்டவாளப் பகுதியில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

எது ஒரிஜினல் தமிழணங்கு? இணையத்தில் மோதிக்கொள்ளும் திமுக - பாஜக!

top videos

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோழிக்கோடு ரயில்வே போலீசார் இசாமை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். செல்பி மோகத்தால் மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Kerala, Selfie death