முகப்பு /செய்தி /இந்தியா / பிடித்த உணவை அம்மா சமைத்து கொடுக்கவில்லை..தற்கொலை செய்துகொண்ட சிறுமி - அதிர்ச்சியான சம்பவம்!

பிடித்த உணவை அம்மா சமைத்து கொடுக்கவில்லை..தற்கொலை செய்துகொண்ட சிறுமி - அதிர்ச்சியான சம்பவம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பிடித்த உணவைத் தாய் செய்து கொடுக்கவில்லை என்று 16 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttarakhand (Uttaranchal), India

தனக்கு பிடித்த உணவை தாய் சமைத்துக் கொடுக்கவில்லை என்று சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி வீட்டில் அம்மாவிடம் பிடித்த உணவை சமைக்கவில்லை என்று சட்டையிட்டுள்ளார். அதனை தொடர்ந்து கோபித்துக்கொண்டு அறையில் சென்று கதவை சாற்றியுள்ளார். நேரம் கடத்தும் கதவை திறக்காததால் குடும்பத்தினர் அச்சம் அடைத்து கதவை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது சிறுமி கோபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரித்துள்ளனர். இந்த சம்பவம் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Also Read : பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பாதி விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை.. பங்க்கில் அலைமோதிய கூட்டம்

காவல் அதிகாரி இது குறித்து தெரிவிக்கையில் சிறுமி அவரின் அம்மாவிடம் பிடித்த உணவு சமைத்து தரவில்லை என்று சண்டையிட்டு கோபித்துக் கொண்டுள்ளார். இரவு உணவு கூட சாப்பிடாமல் அறையின் கதவை பூட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Commit suicide, Minor girl, Uttarkhand