முகப்பு /செய்தி /இந்தியா / 2 ஆண்டுகள் வஞ்சம்.. மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற சிறுவன்..!

2 ஆண்டுகள் வஞ்சம்.. மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற சிறுவன்..!

மாதிரி படம்

மாதிரி படம்

2 வருடத்திற்கு முன்பு நடந்த திருட்டு சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் 14 வயது சிறுவன் ஒருவன் 58 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்துள்ளான்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madhya Pradesh, India

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தின் ஹனுமானா பகுதியில் வசிக்கும் 58 வயது பெண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்  மர்மான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த பெண்ணின் கணவரும் மகனும் இரண்டு வாரங்களாக ஊரில் இல்லை. மருத்துவ சிகிச்சைக்காக அவர்கள் வெளியூர் சென்றிருந்த வேலையில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதால் இது திட்டமிட்ட படுகொலையா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தியது. அப்போது தான் அதிர்ச்சிக்குரிய உண்மை அம்பலமானது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பெண்ணின் வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் ஒரு 14 வயது சிறுவன் வந்துள்ளான். அப்போது அந்த சிறுவன் பெண்ணின் வீட்டில் இருந்த செல்போனை திருடியதாகவும், அதை கண்டுபிடித்துவிட்ட அப்பெண்ணும் குடும்பத்தாரும் அவனை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இது அந்த சிறுவனை ஆத்திரப்படுத்திய நிலையில், அன்று தொடங்கி பெண்ணை பழிவாங்கப் போகிறேன் என சிறுவன் தொடர்ந்து கூறி மிரட்டி வந்துள்ளான்.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து தனது ஆத்திரத்திற்கு பழி தீர்க்கும் விதமாக கொடூர செயலில் அவன் ஈடுபட்டுள்ளான். பெண்ணின் கணவரும், மகனும் வீட்டில் இல்லை என்பதை அறிந்து கொண்ட சிறுவன், ஜனவரி 30ஆம் தேதி இரவு வீட்டிற்குள் நுழைந்துள்ளான். பெண் அப்போது தூங்கிக்கொண்டிருந்துள்ளார். பெண்ணை பிடித்து அவரது கை கால்களை கட்டிப்போட்ட சிறுவன், கூச்சலிட்டும் சத்தம் வெளியே கேட்கக்கூடாது என வாயையும் பாலித்தீன் துணிகளை வைத்து அடைத்துள்ளான்.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணமான பெண்ணை கடத்திய நபர்... ரூ.2 லட்சத்திற்கு விற்று கட்டாய திருமணம் செய்து வைத்த கொடூரம்!

பின்னர் அருகே உள்ள காலி கட்டடத்திற்கு அவரை தூக்கிச் சென்று அங்கு கூர்மையான ஆயுதங்களை வைத்து தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான். மேலும், பெண்ணின் அந்தரங்க உறுப்பை ஆயுதங்கள் மூலம் சிதைத்துள்ளான். பெண்ணிடம் இருந்த நகைகளை திருடி தப்பியோடி தலைமறைவாக இருந்த அந்த 16 வயது சிறுவனை ரேவா மாவட்ட காவல்துறையினர் கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Madhya pradesh, Murder, Rape, Revenge