16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி! ஆசிட் வீசி தாக்கிய கொடூரம்

தாயை துப்பாக்கியைக் கொண்டு மிரட்டிய ஆண்கள், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

news18
Updated: April 20, 2019, 7:43 PM IST
16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி! ஆசிட் வீசி தாக்கிய கொடூரம்
கோப்புப்படம்
news18
Updated: April 20, 2019, 7:43 PM IST
பீகார் மாநிலம் பாட்னாவில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆண்கள், அந்தச் சிறுமியின் மீது ஆசிட்டை ஊற்றியுள்ளனர்.

பீகார் மாநிலம் பஹல்பூர் மாவட்டத்தில் வெள்ளிக் கிழமையன்று இரவு, 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியின் வீட்டுக்குள் நான்கு ஆண்கள் புகுந்துள்ளனர். அந்த வீட்டில் சிறுமியும், அவரது தாய் ஆகியோர் மட்டும் இருந்துள்ளனர்.

தாயை துப்பாக்கியைக் கொண்டு மிரட்டிய ஆண்கள், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளனர். அவர்களுக்கு ஒத்துழைக்காமல் சிறுமி எதிர்ப்பு தெரிவித்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அதனால், ஆத்திரமடைந்த ஆண்கள், சிறுமியின் மீது ஆசிட்டை ஊற்றினர்.

பாதிகப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Also see:

First published: April 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...