Home /News /national /

பீகாரில் கோர விபத்து - 9 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம்

பீகாரில் கோர விபத்து - 9 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம்

பீகாரில் கோர விபத்து - (Photo: ANI/Twitter)

பீகாரில் கோர விபத்து - (Photo: ANI/Twitter)

நேற்று இரவிலிருந்து மட்டும் மொத்தமாக 16 புலம்பெயர் தொழிலாளர் விபத்தில் பலியாகியுள்ளனர்.

    பீகார் மாநிலம் பங்கல்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரியும், பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

    விபத்துக்குள்ளான லாரி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கிடக்கும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதே போன்று உத்தரபிரதேச மாநிலம் மஹோபா நகரில் நேற்றிரவு புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற சரக்கு வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்ததோடு, 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் யவட்மல் என்ற இடத்தில் பேருந்தும், லாரியும் அதிகாலை பொழுதில் மோதிக்கொண்டதில் 4 புலம்பெயர் தொழிலாளர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர், 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவிலிருந்து மட்டும் மொத்தமாக 16 புலம்பெயர் தொழிலாளர் விபத்தில் பலியாகியுள்ளனர்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Bihar, Lockdown, Migrant workers

    அடுத்த செய்தி