ஹோம் /நியூஸ் /இந்தியா /

சிக்கிம் மாநிலத்தில் பயங்கர விபத்து : 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

சிக்கிம் மாநிலத்தில் பயங்கர விபத்து : 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ராணுவ வீரர்கள் பலி

ராணுவ வீரர்கள் பலி

இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sikkim, India

வடக்கு சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு சிக்கிமின் ஜெமா பகுதியில் ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் இன்று பிற்பகல் விபத்தில் சிக்கியது. அதில் பயணித்த 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 4 வீரர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “சாலை விபத்தில் 16 வீரர்கள் உயிரிழந்துள்ளது எனது மனதில் ஆழ்ந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சேவைக்காகவும், அர்ப்பணிப்புக்காகவும் நாடு நன்றி தெரிவித்துக்கொள்கிறது” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

First published: