Home /News /national /

இந்திய குடியரசு தலைவரின் பதவியேற்பு உறுதிமொழியில் என்ன இருக்கும்?

இந்திய குடியரசு தலைவரின் பதவியேற்பு உறுதிமொழியில் என்ன இருக்கும்?

திரவுபதி முர்மு

திரவுபதி முர்மு

இன்று இந்தியாவின் 15 ஆவது குடியரசு தலைவராக பதவி ஏற்ற திரௌபதி முர்மு அவர்கள் ஏற்ற உறுதி மொழி இதுவே.

அரசின் ஒவ்வொரு பதவியை ஏற்கும் போதும் அந்த பதிவுக்கான பொறுப்புகளையும் கடமைகளையும் சரிவர செய்வேன் என்று அந்த பதவியில் சேர்பவர் உறுதி ஏற்க வேண்டும்.

நாட்டின் முதல் குடிமகனாக விளங்கும் குடியரசு தலைவர் பதவி ஏற்கும் போது எடுக்கப்படும் உறுதிமொழியில் என்ன இருக்கும் என்று தெரிந்து கொள்வோம். இன்று இந்தியாவின் 15 ஆவது குடியரசு தலைவராக பதவி ஏற்கும் திரௌபதி முர்மு அவர்கள் ஏற்ற உறுதி மொழி இதுவே.

"திரௌபதி முர்முவாகிய நான், கடவுளின் பெயரால் சத்தியம் செய்கிறேன். இந்திய குடியரசுத் தலைவர் பதவியின் பணிகளை உண்மையாகவும் நேர்மையாகவும் நிறைவேற்றுவேன் என்றும், என்னால் முடிந்தவரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தை போற்றி, உறுதிப்படுத்தவும் பாதுகாக்கவும் முயல்வேன். இந்திய மக்களின் சேவை மற்றும் நல்வாழ்வுக்காக என்னை அர்ப்பணிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்''

இந்திய அரசியலமைப்பு சட்டம் 60 இந்த கீழ், ஒவ்வொரு ஜனாதிபதியும், ஜனாதிபதியாக செயல்படும் அல்லது ஜனாதிபதியின் பணிகளை நிறைவேற்றும் ஒவ்வொரு நபரும், அவரது அலுவலகத்தில் நுழைவதற்கு முன் இந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும். இந்திய தலைமை நீதிபதி முன்னிலையில் அல்லது அவர் இல்லாத நிலையில், உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி முன்னிலையில் இந்த உறுதியேற்பு நிகழ்வு நடைபெறும்.

முர்முவிற்கு ஒடிசாவில் இருந்து பரிசாக போகும் சந்தாலி புடவைகள்!

வாய்வழி உறுதிமொழி ஏற்கப்பட்டவுடன், அரசு முத்திரையிடப்பட்ட உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து இடப்பட்டு சமர்ப்பிக்கப்படும். அந்த நொடியில் இருந்தே அவர் குடியரசு தலைவர் பதவியில் இருப்பார். இன்று இந்தியாவின் இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமண்ணா  முன்னிலையில் முர்மு அவர்கள் குடியரசு தலைவராக பதவி ஏற்றார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Draupadi Murmu, President Droupadi Murmu

அடுத்த செய்தி