Home /News /national /

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று.. ஒரே நாளில் 27,000 பேர் பாதிப்பு, 284 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று.. ஒரே நாளில் 27,000 பேர் பாதிப்பு, 284 பேர் உயிரிழப்பு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

நாடு முழுவதும் புதிதாக 94 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,525 ஆக அதிகரித்துள்ளது.

    நாடு தழுவிய தினசரி கொரோனா பாதிப்பும் படிப்படியாக உயர்ந்துள்ளது. கடந்த 27ம் தேதி ஒரே நாளில் 6,531 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து, 31ம் தேதி 16,764-ஆக அதிகரித்தது. மேலும், கடந்த 70 நாட்களில் இல்லாத அளவுக்கு நேற்றைய, இன்றைய பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,553 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று 35 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் தினசரி பாதிப்பு கடந்த 4 நாட்களில் சுமார் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

    நாட்டில் கொரோனா மொத்த பாதிப்பு 3,48,83,4 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 5,368 ஆக இருந்த நிலையில், நேற்று 50 சதவீதம் உயர்ந்து 8,067 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. டெல்லியில் புதிதாக 1,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்று முன்தினத்துடன் (1,313) ஒப்பிடுகையில், 37 சதவீதம் அதிகமாகும்.

    Also read: Omicron | உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரான்... நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

    நாடு முழுவதும் 284 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,81,770 ஆக உயர்ந்தது.

    கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,42,84,561 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 10 நாட்களுக்கு முன்பு 75,000க்கும் கீழ் குறைந்திருந்தது. ஆனால் நேற்றைய நிலவரப்படி, சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,22,801 ஆக அதிகரித்துள்ளது.

    இதனிடையே நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 145.16 கோடியைத் தொட்டுள்ளது.

    Also read: வேகமாக பரவும் ஒமைக்ரான்: தற்காலிக மருத்துவமனைகளை தயார்படுத்தவும்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Omicron

    அடுத்த செய்தி