Home /News /national /

உயர் போலீஸ் அதிகாரி உட்பட லஞ்ச, ஊழல் அதிகாரிகள் 152 பேருக்கு கட்டாய ஓய்வு- ஒடிசா அதிரடி

உயர் போலீஸ் அதிகாரி உட்பட லஞ்ச, ஊழல் அதிகாரிகள் 152 பேருக்கு கட்டாய ஓய்வு- ஒடிசா அதிரடி

லஞ்ச ஊழல் அதிகாரிகளுக்கு ஒடிசாவின் களையெடுப்பு

லஞ்ச ஊழல் அதிகாரிகளுக்கு ஒடிசாவின் களையெடுப்பு

ஒடிசாவில் உயர் போலீஸ் அதிகாரி உட்ப்ட லஞ்சம், ஊழல் விவகாரங்களில் சிக்கிய 152 அரசு அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஒடிசாவில் உயர் போலீஸ் அதிகாரி உட்ப்ட லஞ்சம், ஊழல் விவகாரங்களில் சிக்கிய 152 அரசு அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தொடர்பு) திரிநாத் மிஸ்ரா, சுமார் ஒன்பது கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைச் சேர்த்ததாகவும், தனது வருவாயை மீறி சொத்துக்குவிப்பு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு விஜிலென்ஸ் துறையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

    அவரது சொத்துக்களில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்கள் மற்றும் பைக்குகள் அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.சிறையில் இருந்த மிஸ்ராவின் கருத்துக்கு முயன்ற ஊடகம் ஒன்று அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளாது. ஊழலை சகித்துக்கொள்ளக்கூடாது என்ற கொள்கையின் ஒரு பகுதியாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்ததாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

    மிஸ்ராவின் சொத்துகள் உள்ள கட்டாக், குர்தா, ஜாஜ்பூர் மற்றும் நபரங்பூர் மாவட்டங்களில் 11 இடங்களில் விஜிலென்ஸ் துறையினர் சோதனை நடத்தினர்.

    இதன் மூலம், பணிநீக்கம் செய்யப்பட்ட அல்லது கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை 2019 முதல் 152 ஆக உயர்ந்துள்ளது. பிப்ரவரி 16 அன்று, ஒடிசா அரசாங்கம் ஊழல் மற்றும் திறமையின்மை குற்றம் சாட்டப்பட்ட ஐந்து அதிகாரிகளை கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

    லஞ்ச ஊழல் அதிகாரிகள் மட்டத்தில் தலைவிரித்தாடும் ஒடிசாவில் 2021ம் ஆண்டு ஒரு பொறியாளர் ₹14.87 கோடி மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்திருப்பது கண்டறியப்பட்டது - அவருடைய வருமான ஆதாரங்களை விட இது 1,021% கூடுதல் சொத்துக்குவிப்பாகும். இதுவே ஒடிசா விஜிலென்ஸ் இயக்குநரகத்தால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிக அதிக விகிதாசார வருமானமாகும். பங்குச் சந்தையில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களை கண்டுபிடித்ததில் பொறியாளர் பங்குகள் மற்றும் கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்த மொத்த தொகை ₹1.07 கோடி என்பதும் அப்போது தெரியவந்துள்ளது.

    Also Read: காலாவதியான டிரைவிங் லைசென்சை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?

    கட்டாய ஓய்வு போதாது, அவர்களுக்கான ஓய்வுக்குப் பிந்தைய நிதி ஆதாரங்கள், சாதகங்களையும் பிடுங்க வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஏனெனில் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்ட பிறகு எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் கட்டாய ஓய்வு மட்டும் தண்டனையாகுமா என்று மக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Corruption, Naveen Patnaik, Odisha

    அடுத்த செய்தி