ஹோம் /நியூஸ் /இந்தியா /

ராக்கி பாய் போல ஒரு மூச்சில் ஒரு பாக்கெட் சிகரெட் பிடித்த சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்

ராக்கி பாய் போல ஒரு மூச்சில் ஒரு பாக்கெட் சிகரெட் பிடித்த சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்

கேஜிஎப் ராக்கி பாய்

கேஜிஎப் ராக்கி பாய்

சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், கவுன்சிலிங்கும் வழங்க மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சினிமாவில் ஹீரோ செய்த செயலை பார்த்து அதேபோலவே தானும் செய்து பார்க்க வேண்டும் என சிறுவன் ஒருவன் முயற்சித்த சம்பவம் விபரீதத்தில் சென்று முடிந்துள்ளது. இந்திய சினிமாவில் இந்தாண்டு சூறாவளி வரவேற்பை பெற்று வசூலை குவித்த திரைப்படம் கேஜிஎப் 2. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான இப்படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலை அள்ளிக் குவித்தது. திரைப்படத்தில் ராக்கி பாய்யாக நடித்த யஷ்ஷின் ஸ்டைல் மாஸ் சீன்கள் பல இளைஞர்களை கவர்ந்துள்ள நிலையில், தெலங்கானாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் இந்த படத்தை பார்த்து செய்த செயல் விபரீதத்தில் முடிந்தது.

  அம்மாநிலத்தின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு திடீரென அதீத இருமல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. பதறிப்போன பெற்றோர் அவனை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அச்சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கி, பின்னர் எக்ஸ் ரே எடுத்த பார்த்துள்ளனர். அதில் தெரிந்த முடிவுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் அச்சிறுவனின் நுரையீரலில் புகைப் பிடிப்பதால் ஏற்பட்ட மாற்றங்கள் தெரியவந்துள்ளது. உடனடியாக சிறுவனை மருத்துவர்கள் விசாரித்ததில் உண்மை வெளிவந்துள்ளது.

  இந்த சிறுவன் கேஜிஎப் 2 திரைப்படத்தை சில நாள்களுக்கு முன்னர் தான் பார்த்துள்ளார். இரண்டு நாள்களில் மூன்று முறை அந்த படத்தை பார்த்த சிறுவனுக்கு கதாநாயகன் ராக்கி பாய் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது கவர்ந்துள்ளது. ஒரு காட்சி அந்த நாயகன் ஒரு பாக்கெட் சிகெரெட்டை ஒரே மூச்சில் புகைத்து முடித்துள்ளார். அதேபோல் தானும் ஸ்டைலாக சிகரெட் பிடிக்க வேண்டும் என விரும்பிய அச்சிறுவன் முதல் முதலாக புகைப் பிடித்துள்ளார். அத்துடன் சினிமாவில் வருவது போலவே ஒரு பாக்கெட் சிகரெட்டையும் ஒரே மூச்சில் பிடித்துள்ளார்.

  இதையும் படிங்க: ஆதார் எண் பயன்பாடு குறித்து முக்கிய உத்தரவு பிறப்பித்து திரும்பப் பெற்ற மத்திய அரசு

  இதன் காரணமாகவே அச்சிறுவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், கவுன்சிலிங்கும் வழங்க மருத்துவமனை திட்டமிட்டுள்ளது. திரைப்படம் சமூகத்தில் பல்வேறு தாக்கங்களை செலுத்தும் என்பது அனைவரும் அறிந்த நிலையில், சிறுவர்கள் மத்தியில் இதுபோன்ற விபரீத விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Hyderabad, KGF 2, Smoking