மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவிக்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் உறவாக மாற, அந்த நபர் மூலம் மாணவி கர்ப்பமடைந்தார்.
இந்த விஷயத்தை தனது தாய் உள்ளிட்ட வீட்டாருக்கு தெரிவிக்காமல், மறைத்து வந்துள்ளார். உடலமைப்பு குறித்து சந்தேகத்துடன் தாய் கேட்கும் போதெல்லாம், வயிற்றில் ஏதோ பிரச்சனை எனக் கூறி சமாளித்து வந்துள்ளார். மருத்துவமனைக்கும் தனியாக சென்று வந்த இந்த சிறுமி, நிறைமாத கர்ப்பிணி ஆன நிலையில், வெளியே சென்று பிரசவம் பார்த்தால் விஷயம் அம்பலமாகி விடும் என தனக்கு தானே பிரசவம் பார்க்க முடிவு செய்தார்.
இதற்காக யூடியூப் மூலம் ஆலோசனைகளை தேடியுள்ளார். கடந்த மார்ச் 2ஆம் தேதி பிரசவ வலி ஏற்படவே, அறைக்கதவை பூட்டி தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தை பிறந்ததை மறைக்க விபரீத முடிவு எடுத்துள்ளார். பிறந்த பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று, வீட்டில் உள்ள பெட்டி ஒன்றில் குழந்தையின் சடலத்தை மறைத்து வைத்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து சிறுமியின் தாயார் வீடு திரும்பிய நிலையில், வீட்டின் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சிறுமியிடம் கேட்டபோது, மாதவிடாய் என்று கூறி சமாளிக்க முற்பட்டுள்ளார். இதை நம்பாத அவரது தாய் உண்மையை சொல்லும்படி கேட்டிருக்கிறார். அப்போது சிறுமி அனைத்தையும் தாயிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன தாயார், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளார்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு.. சினிமா பாணி படுகொலை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!
தொடர்ந்து அவர் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கவே, குழந்தையின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான நபரை தேடி வருகிறது. மேலும், சிசுவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் தான் கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Maharashtra, Pocso, Pregnant