Home /News /national /

மூளைச்சாவு அடைந்த 15 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம் -

மூளைச்சாவு அடைந்த 15 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம் -

விபத்தில் மூளைச்சாவு அடைந்த 15வயது சிறுமியின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது

விபத்தில் மூளைச்சாவு அடைந்த 15வயது சிறுமியின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது

சிறுமியின் கூலி தொழில் செய்யும் தந்தை தனது மகள் இறப்பதற்கு முன் அவளின் உடலைத் தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்ய முடிவு செய்து பதிவு செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
    விபத்தில் மூளைச்சாவு அடைந்த 15 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் இதயம் மூலம் 32 வயதான நோயாளிக்கு டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை முதல் முறையாக வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டியுள்ளார்.

    15 வயது சிறுமி கடந்த ஆகஸ்ட் 15ம் நாள் சாலை விபத்தில் பலத்த படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் ஆகஸ்ட் 20ம் நாள் சிறுமி மூளை சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சிறுமியின் கூலி தொழில் செய்யும் தந்தை தனது மகள் இறப்பதற்கு முன் அவளின் உடலைத் தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்ய முடிவு செய்து பதிவு செய்துள்ளார்.

    இதன் மூலம்  வாழ்வின் கடைசி விளிம்பில் உடல் உறுப்புக்காகக் காத்துக்கொண்டிருந்த நோயாளிகளுக்குச் சிறுமியின் உடல்  உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 6 நோயாளிகளுக்குத் தேவைப்படும் உடல் உறுப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 32 வயதான இதய நோயாளிக்குச் சிறுமியின்  இதயம் மூலம் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.



    டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையான அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம், டாக்டர் ஆர்எம்எல் மருத்துவமனையில் முதல் முறையாக இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் நரேந்தர் சிங் ஜாஜ்ரியா தலைமையில் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு சண்டிகர் விரைந்து அங்கிருந்து சிறுமியின் இதயத்தை எடுத்துக்கொண்டு 2 மணிநேரத்தில் டெல்லி வந்தடைந்தனர்.

    Also Read : குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் - விழிப்புணர்வு ஏற்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

    இந்த சம்பவத்தைப் பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவிக்கையில் சிறுமியின் உடல் உறுப்பு தானம் மிகவும் உருக்கமான ஒரு செயல், உடல் தானம் என்பது ஒரு விலைமதிப்பற்ற உயிர்காக்கும் பரிசு என்றும் சிறுமியின் உடல் தானம் இன்னும் பல பேரை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த ABVIMS மற்றும் டாக்டர் RML மருத்துவமனை மருத்துவர் விஜய் குரோவர் தலைமையிலான முழு மருத்துவக் குழுவையும் பாராட்டினார்.
    Published by:Janvi
    First published:

    Tags: Brain death, Delhi, Girl Child, Organ donation

    அடுத்த செய்தி