முகப்பு /செய்தி /இந்தியா / 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. சாலையில் 2 கி.மீ. நிர்வாணமாக நடந்து சென்ற அவலம் - உ.பியில் நடந்த கொடூரம்

15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. சாலையில் 2 கி.மீ. நிர்வாணமாக நடந்து சென்ற அவலம் - உ.பியில் நடந்த கொடூரம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி 2 கிமீ தூரம் நிர்வாணமாக சாலை நடந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதபாத் மாவட்டம் போஜ்பூர் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் செப்டம்பர் 1ஆம் தேதி தனது உறவினர் வீட்டிற்கு தோழியுடன் சென்றுள்ளார். பின்னர் இரவு 8 மணிக்கு வீடு திரும்பிய போது அந்த பெண்ணை இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கடத்தி காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காட்டுப் பகுதியில் வைத்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அத்துடன் அந்த பெண்ணின் ஆடைகளையும் முழுமையாக பறித்து பெண்ணை காட்டு பகுதியிலேயே விட்டுச் சென்றுள்ளனர்.

பாதிப்புக்கு ஆளான 15 வயது சிறுமி  வேறுவழியன்றி காட்டில் இருந்து வீடு வரை 2 கிமீ தூரம் நிர்வாணமாகவே நடந்து வந்துள்ளார். இந்த அதிர்ச்சி காட்சிகள் சாலையில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மேலும்,அந்த பெண்ணுக்கு அப்பகுதி மக்கள் யாரும் உதவி செய்யாததுடன், மன நலம் பாதிக்கப்பட்டவர் என நினைத்து சிலர் கல்லால் அடித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது வீட்டாரிடம் தெரிவித்த நிலையில், உள்ளூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நிதின், கபில், அஜய், இம்ரான், நவ்ஷே அலி என்ற 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் வழக்கு விசாரணை சுமார் 15 நாள்கள் கிடப்பிலேயே போடப்பட்டிருந்த நிலையில், பெண் சாலையில் நடக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 11 மாநிலங்களில் என்ஐஏ சோதனை… பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 106 பேர் கைது

top videos

    இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை மொராதாபத் காவல்துறை கையிலெடுத்து நவ்ஷே அலி என்ற நபரை மட்டும் தற்போது கைது செய்துள்ளனர்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சிறுமி ஒருவர் 2 கிமீ நிர்வாணமாக நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: CCTV Footage, Crime News, Gang rape, Uttar pradesh