ஹோம் /நியூஸ் /இந்தியா /

வகுப்பறையில் ஆசிரியர் சரமாரியாக தாக்கியதில்15 வயது தலித் மாணவர் மரணம்!

வகுப்பறையில் ஆசிரியர் சரமாரியாக தாக்கியதில்15 வயது தலித் மாணவர் மரணம்!

ஆசிரியர் தாக்கியதில் உயிரிழந்த 15 வயது தலித் மாணவன்

ஆசிரியர் தாக்கியதில் உயிரிழந்த 15 வயது தலித் மாணவன்

மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்குள்ள தலித் அமைப்புகள் நிகழ்வை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  தலித் சமூகத்தைச் சேர்ந்த 15 வயது மாணவன் ஆசிரியரால் தாக்கப்பட்டு உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

  உத்தரப் பிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தின் வைஷோலி கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவன் நிகித் குமார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். செப்டம்பர் 13ஆம் தேதி சமூக அறிவியல் பாட ஆசிரியர் அஷ்வினி சிங் அங்கு வகுப்பு தேர்வை நடத்தியுள்ளார். இந்த தேர்வில் மாணவர் நிகித் ஓஎம்ஆர் தேர்வுத் தாளில் விடை தேர்வு செய்வதில் தவறு செய்துள்ளார். அதேபோல், ஏதோ ஒரு வார்த்தையில் எழுத்துப் பிழை செய்துள்ளார். ஆசிரியர் அஸ்வினி சிங் மாணவர் நிகித் குமாரின் தேர்வுத் தாளை திருத்தும்போது, இந்த தவறுகளை கண்டு கடும் ஆத்திரமடைந்துள்ளார். மாணவனின் தலைமுடியை பிடித்து இழுத்து மாணவனை வகுப்பறையிலேயே சரமாரியாகத் தாக்கி, ஆசிரியர் அஸ்வினி குமார் அடித்துள்ளார்.

  தாக்குதலில் நிலைகுலைந்து கீழே விழுந்து மாணவர் நிகித் மயங்கியுள்ளார். உடனடியாக மாணவர் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்கா எத்தாவா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மருத்துவமனையில் மாணவனுக்கான சிகிச்சை செலவு ரூ.40,000ஐ ஆசிரியர் அஸ்வினி குமாரே ஏற்றுள்ளார். ஆனால், அப்போது ஆசிரியர் மாணவனின் பெற்றோரிடம் மோசமாக நடந்து கொண்டு சாதிய ரீதியாக வசைபாடியுள்ளார். இந்நிலையில், மாணவனும் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.

  இதையும் படிங்க: 10 வயது சிறுவனை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சக நண்பர்கள்... சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

  மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தலித் அமைப்புகள் நிகழ்வை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், அவுரியா மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் சாரு நிகம் ஆசிரியர் அஸ்வினி குமார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்துள்ளார். மேலும், ஆசிரியரை இடைநீக்கம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Dalit, Murder, School boy, School student, Uttar pradesh