பஞ்சாப்பில் வெடி வெடித்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 15 பேர் பலி..?

பஞ்சாப்பில் வெடி வெடித்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 15 பேர் பலி..?
  • Share this:
பஞ்சாப்பின் டார்ன் தரன் மாவட்டத்தில் நடைபெற்ற மத ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 15 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டார்ன் தரன் பகுதியில் நடைபெற்ற மத ஊர்வலத்தில் வெடிப்பதற்காக டிராக்டர் மற்றும் தள்ளுவண்டியில் பட்டாசுகளை எடுத்து சென்றுள்ளனர். அப்போது நடந்த விபத்தின் போது  பட்டாசுகள் வெடித்ததால் அருகிலிருந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கலாம் என விபத்தை நேரில் பாரத்தவர் தெரிவித்துள்ளார்.

பட்டாசு விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலனவரக்ள் 18-19 வயதுக்குட்பட்டவரகள் என்று காவல் அதிகாரிகள் தெரவித்துள்ளனர். இந்த விபத்து தற்செயலானது தான் என்றும்  தெரவித்துள்ளனர்.


இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்